பொங்கலோ பொங்கல்…. ஏலியன் உடன் பொங்கல் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!

Author: Rajesh
15 January 2024, 7:33 pm

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.

sivakarthikeyan

பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார்.

தற்போது சிவகார்த்திகேயன் கைவசம் அயலான் திரைப்படம் உள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பால சரவணன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். 2017ம் ஆண்டே துவங்கிய இப்படம் சில பிரச்சனையால் 5 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்து இந்த பொங்கலுக்கு தான் ரிலீஸ் ஆகியது.

sivakarthikeyan-updatenews360

படம் குறித்து நிறைய பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. அதுமட்டும் அல்லாமல் வசூலில் அயலான் திரைப்படம் பட்டய கிளப்பி வருகிறது. இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகள் , மகன் , மனைவி என குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படத்தை ஏலியன் உடன் சேர்ந்து பொங்கலை கொண்டாடியது போல் எடிட் செய்து வெளியிட்டு ” இது நமக்கு அயலான் பொங்கல்… அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்” என பதிவிட்டு அயலான் வெற்றியை மகிழ்ச்சியோடு கொண்டாடியுள்ளார்.

  • High Court Orders Sivaji Ganesan House Auction நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?