பிரபல இசையமைப்பாளர் டி. இமான் சமீபத்திய பேட்டி ஒன்றில், ” சிவகார்த்திகேயன் தன்னை ஏமாற்றிவிட்டதாக. அவர் மிகப்பெரிய துரோகி என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், “சிவகார்த்திகேயன் கடின உழைப்பாளி என்பதற்கு மாற்று கருத்தே இல்லை. மனம் கொத்தி பறவை படத்தில் ஆரம்பித்த அவருடனான பயணம் பல படங்களில் தொடர்ந்தது. ஆனால் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்.
அவரை நான் மன்னிக்கவே மாட்டேன். மேலும், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று தடாலடியாக கூறினார். இவ்வளவு வெறுப்புக்கு என்ன காரணம் என கேட்டதற்கு… சம்பவத்தை வெளியில் சொல்ல முடியாது. பார்ப்பதற்கு தான் அவர் நல்ல மனிதர் என்னிடம் அன்பாக பேசிக்கொண்டே எனக்கு எதிரான வேலைகள் செய்துவந்ததை நான் தாமதமாக தான் புரிந்துக்கொண்டேன்.
எனக்கு ஏன் இப்படி துரோகம் செய்தாய்? என நான் பலமுறை கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இந்த இடத்தில் என்னால் சொல்லமுடியாது. இந்த ஊர் என்னை நல்லவன், கெட்டவன் என என்ன சொன்னாலும் பரவாயில்லை. எனக்கு தெரியும் நான் யார் என்று… என்னை படைத்தவனுக்கு தெரியும் நான் யார் என்று என ஆதங்கப்பட்டு பேசினார். டி. இமானின் இந்த பேச்சு கோலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதையெல்லாம் வைத்து பார்த்தால் சிவகார்த்திகேயன் இமானின் முதல் மனைவி மோனிகாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளது. இமான் முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னர் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து எந்த ஒரு படத்திலும் சேர்ந்து பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இமான் தன் மனைவியை விவாகரத்து செய்ய காரணமே சிவகார்த்திகேயன் தான் என செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து பிரபல சினிமா விமர்சகர் வித்தகன் சேகர், பிரபல இசையமைப்பாளரின் மனைவி உடன் மாஸ் நடிகர் தொடர்பில் இருந்தார். அந்த இசையமைபாளர் முதல் மனைவியை விவகாரத்து செய்ய காரணமே அந்த நடிகர் என்று கூறியுள்ளார். இது டி. இமான் சிவகார்த்திகேயன் விவகாரம் தான் என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு விஷயம் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இமானின் தற்போதைய இந்த பேட்டி எல்லாவற்றையும் வைத்து பார்க்கும் போது சிவகார்த்திகேயன் இவ்வளவு மோசமானவரா? என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். அதுமட்டும் அல்லாமல் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யவும் சிவகார்த்திகேயன் தான் காரணம் என செய்தி ஒன்று உலா வந்துக்கொண்டிருக்கிறது.
இச்சம்பவத்தால் டி. இமானை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள். ஏய்… இமான் உனக்கு தில்லு இருந்தால் துரோகம் செய்ததன் காரணத்தை வெளிப்படையாக சொல்லு. அதைவிட்டுவிட்டு ஏதோ வன்மம் காரணமாக அவர் மீது வீண் பழி சுமத்தவேண்டாம். நீ உன் மனைவியை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு குழந்தைகளை தவிக்கவிட்ட போதே உன்னை போன்ற மோசமான மனிதர்களுடன் சவகாசமே இருக்கக்கூடாது என எங்கள் அண்ணன் சிவகார்த்திகேயன் உன்னை கழட்டிவிட்டிருப்பார். இது தான் உண்மையில் நடந்திருக்கும்.
அதன் பின்னர் உனக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. அதுக்காக எங்க அண்ணன் தான் எல்லாத்துக்கும் காரணம்னு சொல்லுவியா? அவ்ளோவ் தான் உனக்கு என எச்சரித்து வருகின்றனர். இன்னும் இது குறித்து சிவகார்த்தியேன் எதுவும் பேசாமல் மௌனம் காத்திருப்பது சரியல்ல என பலர் கூறுகிறார்கள். மேலும் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் எதை பற்றியும் கவலைப்படாதீங்க அண்ணா…. “உண்மை ஒரு நாள் வெல்லும்.. இந்த உலகம் உன் பெயர் சொல்லும்” என ட்வீட் போட்டு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர்.
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
This website uses cookies.