நேற்று முதல் சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமானின் சண்டை தான் சினிமாவின் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. பிரபல இசையமைப்பாளர் டி. இமான் சமீபத்திய பேட்டி ஒன்றில், ” சிவகார்த்திகேயன் தன்னை ஏமாற்றிவிட்டதாக. அவர் மிகப்பெரிய துரோகி என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், “சிவகார்த்திகேயன் கடின உழைப்பாளி என்பதற்கு மாற்று கருத்தே இல்லை. மனம் கொத்தி பறவை படத்தில் ஆரம்பித்த அவருடனான பயணம் பல படங்களில் தொடர்ந்தது. ஆனால் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்.
அவரை நான் மன்னிக்கவே மாட்டேன். மேலும், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று தடாலடியாக கூறினார். இவ்வளவு வெறுப்புக்கு என்ன காரணம் என கேட்டதற்கு… சம்பவத்தை வெளியில் சொல்ல முடியாது. பார்ப்பதற்கு தான் அவர் நல்ல மனிதர் என்னிடம் அன்பாக பேசிக்கொண்டே எனக்கு எதிரான வேலைகள் செய்துவந்ததை நான் தாமதமாக தான் புரிந்துக்கொண்டேன்.
எனக்கு ஏன் இப்படி துரோகம் செய்தாய்? என நான் பலமுறை கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இந்த இடத்தில் என்னால் சொல்லமுடியாது. இந்த ஊர் என்னை நல்லவன், கெட்டவன் என என்ன சொன்னாலும் பரவாயில்லை. எனக்கு தெரியும் நான் யார் என்று… என்னை படைத்தவனுக்கு தெரியும் நான் யார் என்று என ஆதங்கப்பட்டு பேசினார். டி. இமானின் இந்த பேச்சு கோலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதையெல்லாம் வைத்து பார்த்தால் சிவகார்த்திகேயன் இமானின் முதல் மனைவி மோனிகாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளது. இமான் முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னர் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து எந்த ஒரு படத்திலும் சேர்ந்து பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இமான் தன் மனைவியை விவாகரத்து செய்ய காரணமே சிவகார்த்திகேயன் தான் என செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதுமட்டும் அல்லாமல் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யவும் சிவகார்த்திகேயன் தான் காரணம் என செய்தி ஒன்று உலா வந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், சிவகார்த்திகேயன் தன்னுடன் பழுகுபவர்களுக்கு இப்படித்தான் துரோகம் செய்து வருகிறார். தனுஷ் அறிமுகம் செய்துவைத்த 3 படத்தில் நடித்தபோதே தனுஷின் மனைவி ஐஸ்வர்யா உடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால், இதெல்லாம் வெளியே சொல்ல முடியாது என டி. இமான் பேசிய ஸ்டைலிலே பேசி எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.