சிவகார்த்திகேயன் CORRUPT ஆகிட்டாரு.. இனிமேல்தான் அவருக்கு ஆபத்து காத்திருக்கு!
Author: Udayachandran RadhaKrishnan10 February 2025, 2:31 pm
நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஷ்யாம், ஜீவா, பரத், ஜெய் போன்றோர் ஆரம்பத்தில் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டனர். ஆனால் இடையில் அவர்கள் தங்கள் சூப்பர் ஹீரோக்களை போல நினைத்து சொதப்பலான படத்தை கொடுத்து தற்போது காணாமல் போயுள்ளனர் என சினிமா விமர்சகரும், தயாரிப்பாளருமான ஆஸ்கர் பாலாஜி பிரபு விமர்சித்துள்ளார்.
இதையும் படியுங்க : நரம்பெல்லாம் முறுக்கேறுதே… சொக்க வைக்கும் Sreeleela போட்டோஸ்..!!
யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், நிறைய விஷயங்களை கூறியுள்ளார். அதில், எல்லா நடிகர்களுக்கும் கரிஷ்மா இருக்கு, எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதாவுக்கு ஒரு கரிஷ்மா இருக்கு.
சிவகார்த்திகேயன் CORRUPT ஆகிட்டாரு
ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாத நடிகர்கள்தான் ஷ்யாம், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் போன்றோர்.
நடிகர்கள் ஈகோ இல்லாமல் நடிக்க வேண்டும். பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன் மற்றும் அதர்வாவோடு நடிக்கிறார். இதே போல ஈகோ இல்லாமல் நடிக்க வேண்டும்.
எனக்கு தெரிந்து சினிமாவில் விஜய் சேதுபதி தான் சரியான நபர். எல்லா கதாபாத்திரங்களை சரியாக செய்கிறார்.
வில்லன், குணச்சித்திரம், ஹீரோ என எந்த கதபாத்திரமாக இருந்தாலும் நடிக்கவேண்டும். நான் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என கூறினால் அவர்கள் சினிமாவில் நிலைக்க முடியாது. இந்த லிஸ்டில் எஸ்கே வர முடியாது.
ஏனென்றால் சிவகார்த்திகேயன் CORRUPT ஆயிட்டாரு. அவர் தான் அடுத்த விஜய் என நடித்துக் கொண்டிருக்கிறார். எஸ்கே பேஸ்மென்ட் இல்லாம சினிமாவில் பயணம் செய்கிறார்.
ஆக்ஷன் ஹீரோவாக தற்போதுதான் அவர் களமிறங்கியுள்ளார். முன்னர் அவர் காமெடி படத்தில் தான் நடித்துள்ளார். ஆக்ஷன் என்றால் அமரன் படம் மட்டும்தான். சிவகார்த்திகேயன் எதிர்காலம் இனிமேல் தான் தெரியும். அவரை மக்கள் ஏற்றுக்கொள்கிறாரா இல்லையா என்பது இனிமேல்தான் தெரியும் என கூறியுள்ளார்.