தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி நடிகராக சினிமாவில் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையால் உச்ச நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் அமரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க ஜிவி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் .
அமரன் திரைப்படம் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பயோபிக்காக எடுக்கப்பட்டிருக்கிறது.
அந்த திரைப்படத்தில் முகுந்த் வரதராஜன் கேரக்டரில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற தீபாவளி தினத்தை ஓட்டி நாளை வெளியாக இருக்கிறது.
இந்த திரைப்படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். முன்னதாக படத்தின் பிரமோஷன் எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்திருந்தது .
இந்த நிலையில் படத்தை குறித்து பேசி இருக்கும் சிவகார்த்திகேயன் டெல்லியில் ராணுவ வீரர்களுக்காக அமரன் படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீன் நாங்கள் போட்டு காட்டி இருந்தோம் .
அப்போது படம் பார்த்துவிட்டு அவர்கள் என்ன சொல்வார்களோ? என்ற ஒரு அச்சம் பதற்றமாக இருந்தது. ஆனால் படத்தை பார்த்துவிட்டு அவர்கள் ரொம்பவே மகிழ்ச்சியடைந்தார்கள்.
அதில் இரண்டு ராணுவ அதிகாரிகள் என்னிடம் வந்து நாங்கள் உனக்கு ஆபர் தருகிறோம் எங்களுடன் வந்து இந்திய ராணுவத்தில் சேர்ந்து விடு என்கிறார்கள் .
அதைக் கேட்டதும் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. இதுதான் என் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என் நடிப்பிற்கு கிடைத்த பரிசு என சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.
0
0