தமிழ் சினிமாவில் ஸ்டாண்ட் அப் காமெடிகளாக இருந்து தற்போது அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நாயகர்களுள் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். ஆரம்ப காலகட்டத்தில் பெரிய ஹிட் பாடல்களை கொடுத்தவர் என்றால் அது டி இமான் தான். இது ஒரு புறம் இருக்க அனிருத் சிட்டி மக்களை கவர உதவ சிவாவை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தவர். இப்படி ஒரு நிலையில், ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கசப்பானது மோதலாக வெளியாகி குடும்ப பிரச்சினையாகவும் வெளியே தெரிந்தது.
சிவகார்த்திகேயன் இமேஜ் மீது விழுந்த அது பெரும் அடியாக அமைந்தது. அப்படி ஒரு பிரச்சனை அவருக்கு வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் உண்மை எது என்பதை யாருக்கும் தற்போது வரை தெரியாத சஸ்பென்ஸ் ஆக இருந்து வருகிறது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாகி திரைக்கு வந்தது. அடுத்த ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் படம் நடித்து வருகிறார். இதில், வில்லனாக அண்மையின் வித்யூஜம்பால் இணைந்துள்ளார்.
இந்நிலையில், அண்ணன் தம்பி பாசத்தை மையப்படுத்தி வெளியான மாயாண்டி குடும்பத்தார் படத்தை இயக்கிய ராசு மதுரவன் அகோரி பாளையம், முத்துக்கு முத்தாக போன்ற நல்ல படங்களை இயக்கி இருக்கிறார். ராசு மதுரவன் கடந்த 2013 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில், தற்போது அவர்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட முடியாமல் மனைவி பவானி வறுமையில், தத்தளிப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
ராசு மதுரவன் இயக்கத்தில் ஒரு படத்தில் கூட நடிக்காத சிவகார்த்திகேயன் அவரது மனைவி பேட்டியை பார்த்து உடனே உதவி செய்திருக்கிறார். ராசு மதுரவன் மகள்கள் இருவரது ஸ்கூல் பீஸ் 97 ஆயிரம் ரூபாய் அவர் செலுத்தி இருக்கிறார். இதற்காக அவரது மனைவி நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்திருக்கிறார். அவர் இயக்கத்தில், நடித்த பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அவரது குடும்பத்தை கண்டு கொள்ளாத நிலையில், சிவகார்த்திகேயன் செய்த உதவி மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.