உனக்கு ஆப்பு காத்திருக்குப்பா… ஷங்கர் மனைவியை அசிங்கப்படுத்திய சிவகார்த்திகேயன்?

Author: Shree
13 July 2023, 9:44 am

இந்தியாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் தான் இயக்குநர் ஷங்கர். பிரமாண்டம், அதிநவீன தொழில்நுட்பம், பலகோடி பட்ஜெட் என்றாலே கண் இமைக்கும் நேரத்தில் அனைவரது நினைவுக்கு வருபவர் இயக்குனர் சங்கர் தான். இன்றைய சமூகத்தில், இப்படியொரு மாற்றம் நிகழ்ந்து விடாதா? என்று கற்பனைக்கு எட்டாத கதைகளை தேர்வு செய்து, அதற்கு ஏற்ற கதாநாயகர்களை தன் படங்களில் நடக்க வைத்து வெற்றிப்படங்களை அள்ளிக் கொடுத்தவர்.

இதனாலேயே, இயக்குநர் சங்கர் தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநராகவும் இருந்து வருகிறார். இவரது மகள் அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் தற்போதைய வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அதிதி தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறார்கள்.

அதன்படி மலேசியாவில் மாவீரன் ப்ரோமோட் செய்ய சிவகார்த்திகேயன் நேற்று சென்றுள்ளார். ஆனால் அங்கு நிகழ்ச்சி ஏற்பாட்டளார்கள் சரியாக முன்னேற்பாடுகள் செய்யவில்லையாம். சிவகார்த்திகேயனை அழைத்துவர கூட வண்டி அனுப்பவில்லையாம். மேலும், படத்தின் ஹீரோயின் அதிதி ஷங்கருக்கு துணையாக அவரது அம்மா அவருடன் சென்றுள்ளார்.

ஆனால் அவருக்கு எகனாமி க்ளாஸ் டிக்கெட் போட்டு அமரவைத்தார்களாம். மிகப்பெரிய பிரம்மாண்ட இயக்குனரின் மனைவியை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே… இதெல்லாம் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தால் தானே என விமர்சித்துள்ளனர். இதனால் சிவகார்த்திகேயனும் மிகவும் வருத்தபட்டாராம். இதனால் தனக்கு ஏதேனும் கெட்டபெயர் வந்திடுமோ என பயந்து சென்னையில் பிரம்மண்டமாக ப்ரோமோஷன் விழா நடத்தி அதில் ஷங்கர் மற்றும் அவரது மனைவியை அழைத்து மரியாதை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 447

    0

    1