பொறாமை பொறுக்க முடியல…. சிவகார்த்திகேயன் career-ஐ காலி செய்ய நினைத்த பிரபல நடிகர்!

Author: Shree
20 June 2023, 7:50 pm

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பெரிய விஷயம் என்று தான் சொல்ல வேண்டும். தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் உச்ச நடிகராக வளர்ந்து நிற்கிறார். எந்த ஒரு பின்புலனும் இல்லாமல், டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வலம் வந்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தபடாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், ரெமோ, டாக்டர் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிப்பையும் தாண்டி தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதிலும் வெற்றி பயணத்தை துவக்கியுள்ளார். மேலும் பாடலாசிரியாகராகவும் வலம் வருகிறார். இப்படி தன் திறமையை வெளிப்படுத்தி பன்முக திறமை மூலம் வெற்றி கொடி நாட்டி வருகிறார்.

இந்நிலையில் இவரது வளர்ச்சியை பார்த்து பிரபல அரசியல் குடும்பத்தில் இருந்து நடிக்க வந்த இளம் நடிகர் அவரது வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டு சிவகார்த்திகேயன் career-ஐ செய்ய திட்டமிட்டு அடுத்தடுத்து 4 படங்களை அவரது தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க அக்ரீமண்ட் போட்டாராம். ஆனால், அவர்கள் படமெடுக்காமல் மற்ற எந்த இயக்குனரின் படங்களிலும் நடிக்க விடாமல் தடுக்க திட்டமிட்டு தான் இப்படி செய்தார்களாம். சிவகார்த்திகேயனுக்கு இந்த விஷயம் பின்னர் தான் தெரியவந்துள்ளது. அதன் பின்னர் எப்படியோ அவர்கள் பிடியில் இருந்து தப்பித்து வந்தார் என பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1259

    10

    7