எல்லாம் உங்களுக்காக தான்… இணையத்தில் வைரலாகும் SK-வின் வெறித்தனமான வீடியோ.!
Author: Selvan19 February 2025, 1:29 pm
சினிமாவுக்காக எதையும் செய்ய தயாராகும் SK
அமரன் திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் தன்னுடைய உடலை செதுக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி பலருடைய பாராட்டை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது அசுர வேகத்தில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவருடைய நடிப்பில் கடந்த வருடம் வெளியான அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதோடு,சிவகார்த்திகேயன் சினிமா கரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடி,350 கோடிக்கு மேல் வசூலை அள்ளியுள்ளது.
இதையும் படியுங்க: ’அவன் வந்திருக்கான் மச்சான்’.. சுந்தரா டிராவல்ஸ் 2 பட சூப்பர் அப்டேட்!
மேஜர் முகுந்த் என்ற ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவான இப்படத்தில்,நடிகர் சிவகார்த்திகேயன் அசல் ராணுவ வீரராக வாழ்ந்திருப்பார் என்று சொல்லலாம்,அமரன் படத்திற்காக அவர் தன்னுடைய உடல் எடையை அதிகரித்து ரொம்ப பிட் ஆக,இப்படத்திற்கு தன்னை செதுக்கினார்.
தற்போது இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் பயிற்சி செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது,தீவிர பயற்சியின் போது வலிதாங்க முடியாமல்,தரையில் சுருண்டு விழுவது,ஐஸ் பேக் வைப்பது,தன்னுடைய மகனை வைத்து புஷ் எடுப்பது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளது.
Pain of #Sivakarthikeyan during his physical transformation !!
— AmuthaBharathi (@CinemaWithAB) February 18, 2025
Now all that resulted as success in #Amaran❤️🔥 pic.twitter.com/aPhJmtxM8R
சமீபத்தில் தன்னுடைய 40 வது பிறந்த நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்,தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்,அதில் தன்னுடைய ரசிகர்களுக்காக இரட்டிப்பு உழைப்பை போட்டு,உங்களை சந்தோசப்படுத்துவேன் என கூறி இருந்தார்.
மேலும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் மதராசி படத்தின் டைட்டில் டீசர் பக்கா ஆக்ஷன் காட்சிகளோடு வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்தது,இதனால் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து ஆக்ஷன் படங்களில் நடிக்க தன்னை தயார்படுத்தி,ஒரு மாஸ் ஹீரோவாக உருவெடுத்து வருகிறார் என்பது ரசிகர்கள் அனைவருக்கும் கண்முன்னே தெரிகிறது.