இந்த வருஷமும் சரியில்லை… 2024ம் ஆண்டில் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்த சிவகார்த்திகேயன்!
Author: Rajesh9 January 2024, 5:10 pm
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.
பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார்.
தற்போது சிவகார்த்திகேயன் கைவசம் அயலான் திரைப்படம் உள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பால சரவணன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். 2017ம் ஆண்டே துவங்கிய இப்படம் சில பிரச்சனையால் 5 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
மேலும் சிவகார்த்திகேயனுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனின் ரோல் மிக முக்கியமானதாக இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.
இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள தகவல் என்னவென்றால் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லையாம். சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் பல வருடங்களாக அவரின் படத்தில் நடிக்கவேண்டும் என ஆசையோடு இருந்துவந்தார். ஆனால், தற்போது வாய்ப்புகள் கிடைத்தும் அது நிறைவேறாமல் போனதால் இந்த 2014ம் ஆண்டின் ஆரம்பத்திலே சிவகார்த்திகேயன் மிகப்பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளார். இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மிகுந்த அப்செட்டில் இருக்கிறார்களாம்.