திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்!
Author: Prasad14 April 2025, 9:02 pm
பராசக்தி ஹீரோ
சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் “பராசக்தி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் சில காட்சிகளும் சென்னையில் காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகிறது.

1960களில் இந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 1960களின் மதுரையை அப்படியே செட் போடப்பட்டு வருவதாகவும் சில தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான ரவி கே சந்திரன் குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
நெஞ்சு வலி
அதாவது ரவி கே சந்திரன் “தக் லைஃப்” திரைப்படத்தின் DI பணிகளுக்காக மும்பை சென்றிருந்தபோது அங்கே அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாம். ஆதலால் மருத்துவர்கள் அவருக்கு சில நாட்கள் முழு ஓய்வு தேவை என கூறியிருக்கிறார்களாம்.

இதனால் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பை ரவி கே சந்திரனின் உதவி ஒளிப்பதிவாளர் படம்பிடித்து வருகிறாராம். இவ்வாறு ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.