வெற்றி நிச்சயம்…..டாடா இயக்குனர் கூட்டணியில் சிவகார்த்திகேயன் – விரைவில் அறிவிப்பு!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.

பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார். கடைசியாக சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, சிவகார்த்திகேயன் க்வின் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த டாடா திரைப்படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க உள்ளாராம். அண்மையில் சிவகார்த்திகேயனை சந்தித்து கணேஷ் கே பாபு கதை சொல்லி ஒப்பந்தம் வாங்கிவிட்டதாகவும் அடுத்தது தயாரிப்பு, நடிகர் , நடிகர்கள் தேர்வு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கோலிவுட்டில் பேச்சு நிலவி வருகிறது.

UpdateNews360 Rajesh

Recent Posts

பகல்காமில் நடந்த லியோ படப்பிடிப்பு… தாக்குதல் நடந்த இடத்தில்தான் : ஒளிப்பதிவாளரின் உருக்கம்!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் லியோ. திரிஷா, மிஷ்கின் சஞ்சய் தத், அர்ஜூன் உட்பட பலர்…

8 minutes ago

கோவையில் இருந்து திருப்பதி செல்லும் பேருந்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ; ஆந்திர சுற்றுலாத்துறை அதிர்ச்சி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திர மாநில சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தேவஸ்தானம்…

32 minutes ago

நான் ஆடையில்லாம வந்தேன்னு? என்னென்னமோ பேசுறீங்க?- கொதித்தெழுந்த வடிவேலு…

ராஜ்கிரண் அழைத்து வந்த வடிவேலு தனது ரசிகர் ஒருவரின் திருமணத்திற்காக மதுரைக்குச் சென்றிருந்தபோதுதான் வடிவேலுவை முதன்முதலில் சந்தித்தார் ராஜ்கிரண். மீண்டும்…

1 hour ago

நெட்பிலிக்ஸை விரட்டியடிக்காம தூங்கமாட்டாங்க போலயே- நயன்தாராவால் மீண்டும் வந்த வினை?

நயன்தாராவால் வந்த வினை விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமண நிகழ்வை படம்பிடிக்கும் உரிமையை  நெட்பிலிக்ஸ் நிறுவனம் ரூ.25 கோடி கொடுத்து விலைக்கு…

2 hours ago

பிரியங்காவுடன் மனக்கசப்பு? அமீர் – பாவனி திருமணத்தில் பிரியங்கா வந்ததால் புறக்கணித்த மாகாபா?!

அண்மையில் திடீர் என விஜே பிரியங்கா பிரபல DJ வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் முக்கிய…

3 hours ago

ராத்திரில எனக்கு பொண்டாட்டிதான், மத்தவங்களுக்கு எப்படி?- கொதித்தெழுந்த சரத்குமார்! ஏன் இப்படி?

மனைவியிடம் கேட்ட சரத்குமார்? கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை…

4 hours ago

This website uses cookies.