சிவகார்த்திகேயனை எதிர்க்கும் மலையாள பட நடிகர்..யார் போட்ட ஸ்கெட்ச் தெரியுமா..?
Author: Selvan12 November 2024, 7:53 pm
சிவகார்த்திகேயனின் அடுத்த பட தகவல்கள்
நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தின் மெகா வெற்றி மூலம் உலகளவில் பேசக்கூடிய ஒரு நபராக திகழ்கிறார்.
அமரன் திரைப்படம் கிட்டத்தட்ட 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து எக்ஸ்பிரஸ் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவருடைய அடுத்த படமான புறநானுறு பற்றிய முக்கிய தகவலும் வந்துள்ளது.
இப்படம் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாக உள்ளது.ஏற்கனவே இவர் தமிழில் இறுதி சுற்று,சூரரைப்போற்று போன்ற வெற்றி படங்களை தந்துள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய அடுத்த படமும் மிக பெரிய வெற்றி படமாக இருக்கனும்னு ஒவ்வொவரு கதாபாத்திரத்துக்கும் யோசித்து நடிகர்களை தேர்வு செய்தும் வருகிறார்.
இதையும் படியுங்க: கிஸ்ஸில் ஆர்வம் காட்டும் கவின்.. இந்த தடவ மிஸ் ஆகாது..!
சூர்யா வைத்து சூரரைப்போற்று மிக பெரிய வெற்றி அடைந்த நிலையில் மீண்டும் அவரை வைத்து புறநானுறு படத்தை இயக்க முடிவு செய்தார்.ஆனால் சூர்யா கால்ஷூட் பிரச்னை காரணமாக படத்தில் இருந்து விலகினார்.
அதனால் தமிழ் சினிமாவில் தற்போது அடுத்த தளபதி என உச்சத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனை ஹீரோவாக தேர்வு செய்து அதற்கு அவர் ஒப்புதலும் தெரிவித்தார்.
வில்லனாக இறங்கும் மலையாள நடிகர்
இந்நிலையில் தற்போது படத்தின் இன்னொரு முக்கிய கதாபாத்திரமான வில்லனுக்கு யாரை போடுவது என்று படக்குழு தேடிய போது முதலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜை தேர்வு செய்தனர்.
அவர் தற்போது கூலி திரைப்படத்தில் பிஸியாக இருப்பதால் அவருக்கு பதிலாக மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் நடித்த நடிகர் நிவின் பாலியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதனால் சிவகார்திகேயனின் அடுத்த படமான புறநானுறு ரசிகர்கள் பெரிதும் கொண்டாடும் படமாக அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது.