இயக்குனர் சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தன்னுடைய 25 வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு முதலில் புறநானுறு என்று தலைப்பு வைக்கப்பட்டது.அதன் பிறகு சிவாஜிகணேசனின் பராசக்தி பட தலைப்பை படக்குழு வைத்து டீசரை வெளியிட்டார்கள்.
நடிகர் விஜய் ஆண்டனியும் அதே தலைப்பை தன்னுடைய 25 வது படத்திற்கு வைத்துள்ளதால் பெரும் சர்ச்சை நிலவியது.இந்த நிலையில் இரு தரப்பு படக்குழுவும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பராசக்தி தலைப்பு பிரச்சனை முடிவுக்கு வந்தது.
இப்படம் ஹிந்தி எதிர்ப்பை மையப்படுத்தி உருவாகி வரும் சூழலில் சிவகார்த்திகேயன் இதில் கல்லூரி மாணவனாக நடிக்கிறார்.இப்படமும் ஒரு பயோபிக் படமாக தான் உருவாகி வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.அப்போ அந்த உண்மையான கல்லூரி மாணவன் யார் என்று ரசிகர்கள் தேடிய போது,அண்ணாமலை பல்கலைக்கழத்தில் படித்த மாணவர் ராஜேந்திரனின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் பராசக்தி எடுக்கப்பட்டு வருகிறது என்ற தகவல் கசிந்துள்ளது.
ராஜேந்திரன் கல்லூரி படித்து கொண்டிருக்கும் போது 1965ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி,இந்தி திணிப்பு எதிர்ப்பை போராடி தீக்குளித்த இளைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பேரணியில் கலந்து கொண்ட போது,காவல் துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் நெற்றில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இதையும் படியுங்க: லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகாவுக்கு மீண்டும் திருமணமா…இணையத்தில் கசிந்த புகைப்படம்…மாப்பிள்ளை இவரா..!
இவரை கௌரவிக்கும் விதமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அவருடைய திரு உருவப்படத்தை அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி திறந்து வைத்து மரியாதையை செலுத்தினார்.
பராசக்தி படத்திலும் ஒரு தமிழ் மாணவனாக நடிகர் சிவகார்த்திகேயன் ஹிந்தி எதிர்ப்புக்கு போராடுவது போல் டைட்டில் டீசரில் காட்டியுள்ளதால்,இந்த படத்திலும் சிவகார்த்திகேயன் இறந்துவிடுவார் என தெரிகிறது.ஏற்கனவே கடந்த வருடம் மேஜர் முகுந்த் பயோபிக்கில் நடித்து மாபெரும் வெற்றியை ருசித்த சிவகார்த்திகேயன்,பராசக்தி படத்திலும் ரசிகர்களின் பாராட்டை பெறுவார் என கூறப்படுகிறது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.