கடன் பிரச்சனையில் தத்தளிக்கும் சிவகார்த்திகேயன் – வாங்குற சம்பளம் வட்டி கட்டவே பத்தலயாம்!
Author: Rajesh4 February 2024, 1:35 pm
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.

பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார். கடைசியாக சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சிவகார்த்திகேயனை கடனாளியாக்கிய 5 திரைப்படங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ரெமோ:
மிகப்பெரிய எதிர்ப்புகள் மத்தியில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த திரைப்படம் ரெமோ. இந்த படத்தை ஆர். டி. இராஜா ரூ. 35 கோடியில் தயாரித்தார். அந்த படம் நினைத்தது போலவே சூப்பர் ஹிட் அடித்து ரூ. 50 கோடி சம்பாதித்தது. ஆனால், அந்த படத்தின் வெற்றிதான் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த தோல்விகளுக்கு காரணம்.
சீமராஜா:
ரெமோ படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனை நம்பி 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் சீமராஜா. இந்த படம் வெளியாகி ரூ 65லிருந்து ரூ. 70 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்த்தால் வெறும் 17 கோடி ரூபாய் வசூலித்து சிவகார்த்திகேயனை மிகப்பெரிய கடனாளியாக்கியது.
மிஸ்டர் லோக்கல்:
சீமராஜா படத்தின் தோல்வியில் இருந்து எப்படியாவது மீளவேண்டும் என நினைத்து மிஸ்டர் லோக்கல் படத்தை ரூ. 30 கோடி ரூபாயில் எடுத்தனர். இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி கொடுக்காமல் வெறும் ரூ. 16 கோடி வசூல் கொடுத்து மீண்டும் கடன் பிரச்சனையில் தள்ளிவிட்டது.
டாக்டர்:
இதையடுத்து சொந்த தயாரிப்பில் டாக்டர் திரைப்படத்தை எடுத்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ரூ. 100 கோடி வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்தது. ஆனாலும் சிவகார்த்திகேயனின் கடன் பிரச்சனை ஓயவில்லை.
அயலான்:
தொடர் கடன் பிரச்சனையால் அண்மையில் அவர் நடித்து வெளிவந்த அயலான் திரைப்படம் பல வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த படம் ரூ. 50 கோடியில் எடுக்கப்பட்டு ரூ. 95 கோடி வரை வசூலித்துள்ளது. எனவே சிவகார்த்திகேயன் நடித்து சம்பாதிக்கும் பணம் அனைத்தும் அவருக்கு கடன் கொடுக்கவே சரியாக இருக்கிறது என திரைவட்டாரங்கள் கிசுகிசுகிறது.