சிவகார்த்திகேயன் அவுட்… ரஜினி IN : அடுத்த படம் குறித்து வெளியான அறிவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan20 October 2024, 7:56 pm
சிவகார்த்திகேயனை தூக்கி விட்டு அதே கதையில் ரஜினி நடிக்க உள்ளதாக தகவல் கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது
வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இதையடுத்து அவர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த படத்தில் ரஜினி இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: ரூ.100 கோடியை தொட முடியாமல் தவிக்கிறதா வேட்டையன்.? 10 நாள் வசூல் விபரம்!!
கோட் படத்தை பார்த்து அண்மையில் ரஜினி பாராட்டி பேசியிருந்த நிலையில், அவரிடம் சூப்பரான ஒரு கதையை வெங்கட் பிரபு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ரஜினி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினி தற்போது கூலி படத்தில் நடத்து வரும் நிலையில், அடுத்து ஜெயிலர் 2 படமா அல்லது, வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளாரா என்பதை இனி வரும் தகவல்களில் தெரிந்து கொள்வோம் .