விஜய் இடத்தில் சிவகார்த்திகேயன்… சந்தோஷத்தில் சமந்தா : பாராட்டி தள்ளிய ரஜினி!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2024, 4:21 pm

கோலிவுட் முழுக்க அமரன் பட ஆடியோ வெளியீட்டு விழாவை பற்றித்தான் பேச்சே எழுந்துள்ளது. சிவகார்த்திகேயன் நேற்று பேசியது அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல், அஜித், விஜய் ரசிகர்களையே மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

sivakarthikeyan next thalapathy

ஏற்கனவே கோட் படத்தில் விஜய் தனது துப்பாக்கியை கொடுத்து இனி நீங்க தான் பார்த்துக்கணும் என கூறிச் சென்றது, தனது இடத்தில் சிவகார்த்திகேயனை வைத்தது போல அமைந்துள்ளது.

அதே போல அமரன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் அஜித் பாராட்டியது குறித்து சந்தோஷத்தில் பேசினார் சிவகார்த்திகயேன். அஜித், விஜய் ரசிகர்களை தனது வசப்படுத்தியுள்ளா சிவா. சினிமாவை விட்டு விஜய் விலக உள்ளதால் இனி அந்த இடத்தில் SK தான் என இப்போதே பேச்சு எழுகிறது.

Samantha Cinema News

பர்சனல் வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்துள்ள சமந்தா. தற்போது அரிய வகை நோயில் இருந்து குணமாகி மீண்டும் சினிமா விழாக்களில் தலைக் காட்ட ஆரம்பித்துள்ளார். இதனிடையே புதிய ஆண் நண்பருடன் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றது தான் ஹைலைட்டாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோ வைரலாகிய நிலையில், யார் அந்த நபர்? சமந்தா ஏன் அவருடன் க்ளோஸாக இருக்கிறார்? புதிய பாய் பிரண்டா என கேள்விகள் எழுகிறது. ஒரு பக்கம் அவர் சந்தோஷமாக உள்ளார் அதுவே போதும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கோட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. அதே சமயம் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் கொஞ்சம் சொதப்பல் ஆனாலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

GOAT Rajini Vijay Thalapathy

இந்த நிலையில் ரஜினி சமீபத்தில் விஜய்யின் கோட் படத்தை பார்த்து, இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கு போன் செய்து கோட் பார்த்தாகவும், நன்றாக இருப்பதாக வாழ்த்தி பாராட்டியுள்ளார். இந்த செய்தியை வெங்கட்பிரபு தனது X தளத்தில் பகிர்ந்து நன்றி கூறியுள்ளார்.

  • என் கணவருடைய எனர்ஜி 10 ஆளுக்கு சமம்…வெளிப்படையாக பேசிய நரேஷ் பாபுவின் 4வது மனைவி..!