சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ ரிலீஸ் எப்போது..? ரசிகர்களை ஏங்க வைக்கும் போஸ்டர்..! சூப்பரான சர்ப்ரைஸ்..!
Author: Vignesh4 October 2022, 2:15 pm
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருக்கும் படம் அயலான். இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் தொடர்ந்து ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தன்னை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். அவரது தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியான டாக்டர், டான் படங்கள் அடுத்தடுத்து அவருக்கு சூப்பர் ஹிட்டை கொடுத்துள்ளன. இதையடுத்து வரும் தீபாவளிக்கு அவரது பிரின்ஸ் படம் ரிலீசாகவுள்ளது.

அயலான் படம் இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருக்கும் படம் அயலான். இன்று நேற்று நாளை என்ற சிறப்பான படத்தை கொடுத்த ரவிக்குமார் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து சிஜி வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் ஏலியன் படம் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ரகுல் பிரீத் சிங் ஜோடியாகியுள்ள நிலையில், ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தில் இஷா கோபிகர் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ள நிலையில், இந்தப் படம் இந்தியாவில் வெளியாகும் முதல் ஏலியன் படம் என்றும் படம் வேறு லெவலில் இருக்கும் என்றும் அவர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பறக்கும் கம்பளம் முன்னதாக இந்தப் படத்தின் வித்தியாசமான போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் பறக்கும் கம்பளத்தில் ஏலியனுடன் சிவகார்த்திகேயன் உற்சாகமாக பயணம் மேற்கொள்கிறார். பின்புலத்தில் மாய உலகம் தென்படுகிறது. ஏலியனுடன் உற்சாகம் சிவகார்த்திகேயன் ஹெட்செட் போட்டுக் கொண்டு உற்சாகமாக காணப்படுகிறார்.
ஏலியனுக்கு பேண்ட் போட்டு விட்டிருக்கிறார்கள். அதுவும் சிரித்தபடி தான் காணப்படுகிறது. ஏலியனை வைத்து ஏதோ செய்யப்போகிறார்கள் என்பது மட்டும் இந்த போஸ்டர் மூலம் உறுதியாகியுள்ளது. தீபாவளிக்கு ரிலீசாகும் பிரின்ஸ் படம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி வருகின்றன. தற்போது தீபாவளி ரிலீசாக அவரது பிரின்ஸ் படம் ரிலீசாக உள்ள நிலையில், அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பிலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன். இதனிடையே அயலான் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.