நீ வாயை தொறந்தா மூடமாட்ட, உனக்கு எப்படி செட்டாகும்.. KPY பாலாவை திட்டிய சிவகார்த்திகேயன்..!
Author: Vignesh3 January 2024, 10:56 am
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.
பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார்.
பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார்.
இப்படியான நேரத்தில் இசையமைப்பாளர் டி. இமான் சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார். அவரை நான் மன்னிக்கவே மாட்டேன். மேலும், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று பேட்டி ஒன்றில் கூறியது சினிமா வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை இமான் மனைவியுடன் சிவகார்த்திகேயன் தகாத உறவு வைத்திருந்திருக்கிறார். அதைத்தான் இமான் துரோகம் என சொல்கிறார் என்றெல்லாம் கண்ணு, காது, மூக்கு வைத்து இஷ்டத்துக்கும் வதந்திகள் எழுதி வெளியிட்டிருந்தது பரபரப்பான செய்தியாக பேசப்பட்டு வந்தது.
இதுவரை சிவகார்த்திகேயன் இதற்கு எந்த ஒரு பதிலோ, மறுப்போ தெரிவிக்கவே இல்லை. இந்நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து எந்த செய்தி வெளியானாலும் அது சர்ச்சையாக தான் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் ஆறு வருட தாமதத்தில் வெளியாகியுள்ள நிலையில், படம் எப்படி இருக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில், படு சூப்பராக நடந்தது. அந்த நிகழ்ச்சி, சிவகார்த்திகேயன் தனது மொத்த குடும்பத்துடன் கலந்து கொண்டார். இந்த நிலையில், அயலான் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் KPY பாலாவை சிவகார்த்திகேயன் திட்டியுள்ளார். அதாவது, கனா மற்றும் அயலான் படங்களில் நடிக்க வைக்க பாலாவை பட குழு அனுகியுள்ளனர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனை சிவகார்த்திகேயன் நிகழ்ச்சியில், கேட்க அதற்கு பாலா அயலான் படத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் பேசவே பேசாது என்பதால் யோசித்தேன் என பாலா சொல்ல நீ வாயை திறந்தால் மூட மாட்ட உனக்கு எப்படி அந்த ரோல் செட் ஆகும் என சொல்ல மீண்டும் நன்றி சொன்னார் பாலா. உடனடியாக பேசிய சிவகார்த்திகேயன் நான் உன்னை திட்டுகிறேன், பாராட்டவில்லை என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.