தம்பியின் மேட்டர் வெளியானதும் விஷயத்தை மழுப்பும் அக்கா – சிவகார்த்திகேயன் சகோதரியை விளாசும் நெட்டிசன்ஸ் !

Author: Shree
21 October 2023, 12:34 pm

கடந்த சில நாட்களாக சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமானின் சண்டை தான் சினிமாவின் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. பிரபல இசையமைப்பாளர் டி. இமான் சமீபத்திய பேட்டி ஒன்றில், ” சிவகார்த்திகேயன் தன்னை ஏமாற்றிவிட்டதாக. அவர் மிகப்பெரிய துரோகி என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், “சிவகார்த்திகேயன் கடின உழைப்பாளி என்பதற்கு மாற்று கருத்தே இல்லை. மனம் கொத்தி பறவை படத்தில் ஆரம்பித்த அவருடனான பயணம் பல படங்களில் தொடர்ந்தது. ஆனால் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்.

அவரை நான் மன்னிக்கவே மாட்டேன். மேலும், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று தடாலடியாக கூறினார். இவ்வளவு வெறுப்புக்கு என்ன காரணம் என கேட்டதற்கு… சம்பவத்தை வெளியில் சொல்ல முடியாது. பார்ப்பதற்கு தான் அவர் நல்ல மனிதர் என்னிடம் அன்பாக பேசிக்கொண்டே எனக்கு எதிரான வேலைகள் செய்துவந்ததை நான் தாமதமாக தான் புரிந்துக்கொண்டேன்.

எனக்கு ஏன் இப்படி துரோகம் செய்தாய்? என நான் பலமுறை கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இந்த இடத்தில் என்னால் சொல்லமுடியாது. இந்த ஊர் என்னை நல்லவன், கெட்டவன் என என்ன சொன்னாலும் பரவாயில்லை. எனக்கு தெரியும் நான் யார் என்று… என்னை படைத்தவனுக்கு தெரியும் நான் யார் என்று என ஆதங்கப்பட்டு பேசினார். டி. இமானின் இந்த பேச்சு கோலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதையெல்லாம் வைத்து பார்த்தால் சிவகார்த்திகேயன் இமானின் முதல் மனைவி மோனிகாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளது. இமான் முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னர் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து எந்த ஒரு படத்திலும் சேர்ந்து பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இமான் தன் மனைவியை விவாகரத்து செய்ய காரணமே சிவகார்த்திகேயன் தான் என செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக இமான் அந்த பேட்டியில்… சிவகார்த்திகேயன் எனக்கு செய்த துரோகத்தை வெளியில் சொன்னால் என் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் என கூறியது தான் அண்டர்லைன் செய்து பேசுகிறார்கள்.

இதனால் உண்மையிலே சிவகார்த்திகேயன் அவ்வளவு மோசமானவரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அந்த விஷயம் குறித்து இமான் பேசும்போது ஒரு வித பதற்றம், வருத்தம் , வலி உள்ளிட்டவை அவரது வார்த்தைகளில் காண முடிகிறது என மக்கள் பலர் அவருக்கு ஆதரவு கொடுத்து அவருக்கு ஆறுதல் அளித்து வருகிறார்கள். இதனால் மக்களுக்கு சிவகார்த்திகேயன் மீது ஒரு தவறான பிம்பம் விழுந்துள்ளது. அவர் வெகுளித்தனமாக இருப்பது போல் முகமூடி அணிந்து மிகவும் மோசமானவராக இருக்கிறார் என இமானே கூறியுள்ளதை மக்கள் கவனிக்க துவங்கியுள்ளனர்.

இதுபற்றி சிவகார்த்திகேயன் இதுவரை எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்காமல் இருப்பது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்படியான சர்ச்சைக்குரிய நேரத்தில் சிவகார்த்திகேயனின் அக்கா கௌரி மனோகரி “சிவகார்த்திகேயன் போல ஒரு தம்பி எனக்கு அடுத்த ஜென்மத்திலும் கிடைக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இந்த கருத்தை பலர் விமர்சித்து வருகின்றனர். தம்பியின் மேட்டர் வெளியான பின் அக்கா தம்பி நல்லவர் என்பதை மழுப்புகிறார். எந்த நேரத்தில் என்ன பேசுவது என்று தெரியாதா? என்ன மாதிரி பிரச்சனை போய்ட்டு இருக்கு அதற்கு பதில் அளிக்காமல் இப்படி தம்பிக்கு சொம்பு தூக்குறிங்களே என அவரை மோசமாக விமர்சித்து தள்ளியுள்ளனர்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 1245

    4

    1