ஆக்ஷன் கிங் அர்ஜுன் பட டைட்டிலில் SK 23…மிரட்டலான லுக்கில் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ.!

Author: Selvan
17 February 2025, 12:58 pm

ஆக்ஷனில் மிரட்டும் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 40 வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் பல திரைப்பிரபலங்கள்,ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் SK 23 படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டைட்டிலை படக்குழு ரிலீஸ் செய்து, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளது.

இதையும் படியுங்க: அஜித் சார் கூட நடிக்க வாய்ப்பு…விஜய்சேதுபதி இப்படி மிஸ் பண்ணிட்டாரே..எந்த படமா இருக்கும்.?

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது வளர்ந்து வரும் ஹீரோக்களில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்து வருகிறார்.கிட்டத்தட்ட தன்னுடைய 25 வது படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன்,பல வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

SK 23 Movie Update

அந்த வகையில் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்தில் நடித்து வருகிறார்,இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார்,படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.பான் இந்திய படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு படக்குழு மதராஸி என டைட்டில் வைத்துள்ளது,சிவகார்த்திகேயன் படம் என்றாலே பழைய பட டைட்டிலை வைப்பது வாடிக்கையாகிவிட்டது.

ஏற்கனவே எதிர்நீச்சல்,காக்கிசட்டை,ரஜினிமுருகன்,மாவீரன்,சீமராஜா,அமரன் என பல படங்களுக்கு பழைய படத்தின் டைட்டிலை வைத்து வெற்றி கொடுத்து வருகிறார்,தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கும் சிவாஜிகணேசனின் பராசக்தி டைட்டிலை வைத்துள்ளார்,இந்த நிலையில் தற்போது ஏ ஆர் முருகதாஸும் 2006 ஆம் ஆண்டு அர்ஜுன்,வேதிகா,விவேக் நடிப்பில் வெளிவந்த மதராஸி திரைப்படத்தின் டைட்டிலை வைத்துள்ளார்கள்.

சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தின் டைட்டில் டீசர் பக்கா ஆக்க்ஷன் காட்சிகளுடன் மிரட்டலாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது,காமெடி கலந்த படங்களில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன்,தற்போது அடுத்தடுத்து ஆக்ஷன் படங்களில் நடித்து வருவதால்,தென்னிந்திய சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக உருவெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Famous Actress joined in Ajiths Good Bad Ugly அஜித்துடன் இணையும் பிரபலம்.. 25 வருடங்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்த நடிகை!
  • Leave a Reply