இயக்குனருடன் வாக்குவாதம்: படப்பிடிப்பு தளத்தில் இருந்து திடிரென வெளியேறிய SK…!
Author: Selvan3 December 2024, 6:29 pm
சிவகார்த்திகேயனின் கோபம்: படக்குழுவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி ரொம்ப பிஸியாக இருக்கிறார்.
அந்தவகையில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கிறார்.அதனையடுத்து சுதா கொங்கரா இயக்கம் புறநானுறு படத்தில் நடிக்க ஒப்பந்த ஆகியுள்ளார்.இப்படத்தில் இவருடன் ஜெயம் ரவி,அதர்வா,ஸ்ரீலீலா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இவர்கள் நான்கு பேரையும் வைத்து,லுக் டெஸ்ட் மற்றும் திரைப்பட அறிமுக காணொளி உருவாக்க திட்டமிட்டிருந்தார்,இயக்குனர் சுதா கொங்கரா.
தாடி விவகாரம்
அந்தவகையில் சிவகார்த்திகேயனை அழைத்துள்ளார்கள்,அவரும் சொன்ன நேரத்தில் படப்பிடிப்பிப்பு தளத்திற்கு வந்துள்ளார்.அங்கே அவரை பார்த்த இயக்குனர் சுதா கொங்கரா கொஞ்சம் தாடியை குறையுங்கள்,அதிகமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.அதற்கு சிவகார்த்திகேயன் இப்போது இருக்குற மாதிரி கெட்டப்பில் இருங்கள் என்று தானே முதலில் சொன்னிங்க,என்று தாடி குறைக்க மறுத்துவிட்டாராம்.
இதையும் படியுங்க: பங்குச்சந்தை மன்னன் முதல் மோசடி மன்னன் வரை : ஹர்ஷத் மேத்தா vs லக்கி பாஸ்கர்!
இதனால் கோவமான சுதா கொங்கரா சிவகார்த்திகேயனை திட்டுவது போல் மற்றவர்களை கொச்சையாக திட்டியுள்ளார்.அதிலும் சிவகார்த்திகேயனுக்கு கேக்குற மாதிரி பருத்திவீரன் கார்த்தி மாதிரி இவ்ளோ தாடி இருந்தால் எப்படி?என்று சாடை பேசியுள்ளார்.
அதனை கேட்டு கோவமான சிவகார்த்திகேயன்,யாரிடமும் சொல்லாமல் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கிளம்பியுள்ளார்.அதன்பின்பு சுதா கொங்கராவின் போன் கால் மற்றும் மெசேஜ் எதற்கும் பதில் அளிக்காமல் தவிர்த்திருக்கிறார்.
இதனால் என்ன செய்வதுனு தெரியாமல் சுதா கொங்கரா,இந்த நிகழ்வை படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷிடம் சொல்லி,அவர் இரண்டு தரப்பிலும் பேசி,சிக்கலை சரிபண்ணிட்டு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.