தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.
பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார்.
தற்போது, சிவகார்த்திகேயன் கைவசம் அயலான் திரைப்படம் உள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பால சரவணன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். 2017ம் ஆண்டே துவங்கிய இப்படம் சில பிரச்சனையால் 5 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்து இந்த பொங்கலுக்கு தான் ரிலீனது.
இந்நிலையில், நமக்கு பிடித்த நடிகர் நடிகையை பார்க்க முடியுமா என நம்மில் பலரும் ஏங்கி இருப்போம். அப்படிதான் ஒரு ரசிகை நடிகர் சிவகார்த்திகேயனை பார்க்க வேண்டும் என பல நாட்கள் காத்திருந்து அந்த ரசியை தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டி போட்டும் வருகிறார். அவர் பெயர் தன்ஸீரா கேரளத்தைச் சேர்ந்த இவர் தற்போது சூப்பர் சிங்கர் போட்டியிட்டு வருகிறார். என்றாவது ஒருநாள் சிவகார்த்திகேயனை பார்த்து விடமாட்டோமா என ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் தன்ஸீராவை சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்து உள்ளார் சிவகார்த்திகேயன். அந்த வீடியோ, இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் கூடுதல் வரி விதிப்பை அறிவித்ததன் எதிரொலியால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்கா…
முழு நேர அரசியலில் விஜய் தனது கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்துக்கொடுத்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக உருமாறவுள்ளார் விஜய்.…
அரியலூர் ஜெயங்கொண்டம் ஆண்டிமடத்தில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தமிழகத்தில் இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும்…
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…
நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…
This website uses cookies.