10 வருடம் கழித்து பாருங்க….சூர்யாவிடம் சவால் விட்ட சிவகார்த்திகேயன்..!
Author: Selvan14 December 2024, 6:07 pm
தமிழ் சினிமாவில் தற்போது அடுத்த தளபதி என்று செல்லமாக அழைக்கும் அளவிற்கு அசுர வளர்ச்சி கண்டு வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் தன்னுடைய கடின உழைப்பால் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்தார்.எந்த நடிகரையெல்லாம் பேட்டி எடுத்தாரோ,அவர்களுடன் சம அளவு போட்டி போட்டு தற்போது நடித்து வருகிறார்.
இவர் விஜய் டிவியில் ஜோடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது நடிகை ரம்யா கிருஷ்ணன் சிவகார்த்திகேயனை பார்த்து,நீங்க ஒரு நாள் பெரிய ஆளா வருவீங்க அப்பிடி வரவில்லை என்றால் என் பெயரை மாற்றிக்கொள்கிறேன் என்று சவால் விடுவார்.
அந்த வகையில் சில வருடங்களுக்கு பிறகு நடிகர் சூர்யா நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதையும் படியுங்க: பக்தி பரவசத்தில் நடிகை த்ரிஷா…கோவை மருதமலையில் சிறப்பு வரவேற்பு…!
அப்போது சிவகார்த்திகேயன் ஒரு நாள் பங்கேற்கும் போது,”சூர்யாவை பார்த்து என்ன உடம்பா இருக்கீங்க சார்..10 வருடம் கழித்து பிறகு பாருங்க..இதே மாதிரி நானும் உடம்பை ஏற்றி காமிக்கிறேன்” என்று சொல்லியுள்ளார்.அதற்கு சூர்யாவும் ஒகே ஒகே வாங்க,என சந்தோசமாக பதில் அளித்தார்.
சிவகார்த்திகேயன் சொன்னது போலவே,சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படத்தில் அவரது உடம்பை மெருகேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.