தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரம் நமக்கு எதுக்கு? ஸ்மார்ட்டாக சொன்ன சிவகார்த்திகேயன்!

Author: Udayachandran RadhaKrishnan
8 March 2025, 4:25 pm

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் இந்த ஜோடி சில ஆண்டுகளில் பிரிந்தனர்.

சட்டப்பூர்வமாக இருவரும் விவாகரத்து வாங்கி பிரிந்தனர். இது ரசிகர்கள் மட்டுமின்றி ரஜினிகாந்த் குடும்பத்துக்கே அதிர்ச்சியாக இருந்தது.

இதையும் படியுங்க: கானா இசைவாணிக்கு மிரட்டல்…பாஜக நிர்வாகிகள் அதிரடி கைது.!

இந்த நிலையில் இருவர் குறித்து சிவகார்த்திகேயன் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 3 படம் ரிலீசாகும் சமயத்தில், நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ், ஐஸ்வர்யா கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன், தனுஷை பேச அழைத்தார். அந்நிகழ்ச்சியல் தனுஷ் பேசும் போது, காதல் கொண்டேன் பட ட்ரெய்லரை பார்த்து ஐஸ்வர்யா என்னிடம் விழுந்துவிட்டார்.

அவரை தேடி நான் போகவில்லை. அவர்தான் என்னை தேடி வந்தார். நீங்கள் எல்லாம் தப்பாக புரிந்துகொண்டீர்கள் என பேசினார்.

உடனே ஐஸ்வர்யாவோ, எஸ்கேவை பார்த்து இப்போ இதற்கு நீங்கள் என்ன கவுன்ட்டர் கொடுக்க போகிறீர்கள் என நான் கேட்க ஆவலாக இருப்பதாக கூறினார்.

அதற்கு எஸ்கேவோ நாமெல்லாம் பேசிட்டிருப்போம்.. அவங்க குடும்ப பிரச்சினை நமக்கு எதுக்கு பாஸ் என பார்வையாளர்களை பார்த்து கூறுவார்.

Sivakarthikeyan Talk About Dhanush and aishwarya

இந்த வழைய வீடியோ மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அப்பவே நம்ம ஆளு செம விவரதான் என விமர்சனம் செய்து வருகின்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?