இமான் மனைவிக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த டார்ச்சர்.. ஓ அந்த சம்பவம் இப்படித்தான் நடந்துச்சா?..

Author: Vignesh
6 February 2024, 3:32 pm

ஒரு சில மாதங்களாக அவ்வப்போது இணையதளத்தில் இமான் குறித்த சர்ச்சை எழுந்து தான் வந்து கொண்டிருக்கிறது. அதாவது, சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக இசையமைப்பாளர் இமான் ஒரு பேட்டி ஒன்றில், குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டது.

sivakarthikeyan-updatenews360

தற்போது, வரை இமான் பேச்சுக்கு சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை. சமீபத்தில், அவர் கலந்து கொண்ட பேட்டிகளிலும் கூட இமான் பற்றி வாய் திறக்கவில்லை. தன் மீது எழுந்த குற்றச்சாட்டுக்கு விளக்கமும் அளிக்கவில்லை.

இந்நிலையில், கோலிவுட்டின் க்ளீன் பாய் என்ற பெயரை சிவகார்த்திகேயன் பெற்றிந்தார். சமீபத்தில் இசையமைபாளர் டி இமான் உடைத்திருக்கிறார். இதுகுறித்து, சினிமா விமர்சகர்கள் சிவகார்த்திகேயன் பற்றிய ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்கள்.

இந்நிலையில், டி இமான் மற்றும் அவரது முதல் மனைவி பற்றி சிவகார்த்திகேயன் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில், நான் இமான் அண்ணன் குடும்பத்துடன் நெருங்கி பழகுகிறேன் என்றும், அவரை அண்ணா அவரது மனைவி அண்ணி என்றுதான் அழைப்பேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும், இமான் அண்ணாவுக்கு கால் செய்து பேசுகிறேனோ இல்லையோ அண்ணிக்கு தான் கால் செய்து டார்ச்சர் செய்து கொண்டே இருப்பேன். ஏன் கொழுந்தனாரே இப்படி பண்றீங்க என்று அவரும் பதிலுக்கு சொல்வார். இது தொழிலை மீறிய ஒரு உறவு என்று சிவகார்த்திகேயன் கூறி இருந்த அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அடப்பாவி, அண்ணி அண்ணிணு சொல்லி ஒரு குடும்பத்தையே சுக்கு நூறாக்கிட்டையே என்றும் அந்த மாதிரி சம்பவத்தை பண்ணிட்டியே கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…