தனுஷை மீண்டும் இழுத்த சிவகார்த்திகேயன்.. திடீரென மாறிய முகம்!

Author: Hariharasudhan
8 November 2024, 2:28 pm

எதிர்நீச்சல் படத்தில் இடம் பெற்றிருந்த பூமி என்ன சுத்துதே பாடலை எழுதிய தனுஷுக்கு, எஸ்கே அமரன் பட இந்தி புரொமோஷன் நிகழ்வில் நன்றி கூறியுள்ளார்.

சென்னை: கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் அமரன். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை பயோபிக் படமாக படைக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அமரன் திரைப்படத்தின் இந்தி புரோமோஷன் நிகழ்வு ஒன்றில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட படக் குழுவினர் பங்கேற்றனர். அப்போது, சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தில் இடம் பெற்று உள்ள ‘ பூமி என்ன சுத்துதே ‘ என்ற பாடலை ஒருவர் பாடினார். தொடர்ந்து, ‘ டேமேஜ் ஆன பீஸ் நானு, ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன் ‘ என்ற லைனை பாட, சிவகார்த்திகேயனும் சேர்ந்து அப்பாடலை பாடினார்.

பின்னர், இந்தப் பாடலை எனக்காக மிக வேகமாக எழுதிய தனுஷுக்கு நன்றி என எஸ்கே கூறினார். இதனையடுத்து, அங்கு ஆரவாரம் ஏற்பட்டது. முன்னதாக, ” நான் படத்தின் மூலம் ஒருவரை உயர்த்தினேன் என கூற மாட்டேன் ” என சிவகார்த்திகேயன் ஒரு மேடையில் கூறினார். இது அப்போது சிவகார்த்திகேயன் மீது விமர்சனத்தை வீச காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க : தனுஷ்க்கு திருப்பி கொடுத்த SK.. மீண்டும் இணையும் கூட்டணி : வெளியான மாஸ் அப்டேட்!

ஏனென்றால், தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் துணை கதாபாத்திரமாக வெள்ளித் திரையில் சிவகார்த்திகேயன் அறிமுகம் செய்யப்பட்டதும், இது குறித்து தனுஷ் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்ததுமே இதற்கான காரணமாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தான் அமரன் திரைப்பட விழாவில் தனுஷுக்கு சிவகார்த்திகேயன் நன்றி கூறியுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 175

    0

    0