உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்யும் சிவகார்த்திகேயன்… தனுஷ்கே ஆப்பு வைக்கும் SK!!
Author: Vignesh10 April 2023, 1:30 pm
மெரினா பட வாய்ப்பை பாண்டியராஜ் கொடுத்திருந்தாலும் தனுஷுடன் நடித்த 3 படத்தில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் அனைவரையும் ரசிக்கவைத்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தனுஷ் சிவகார்த்திகேயனை ஹீரோவாக வேண்டும் என விருப்பப்பட்டு சொந்த தயாரிப்பில் எதிர்நீச்சல் படத்தை வழங்கினார்.
வெற்றிப்படமாக அமைந்ததால் உடனடியாக காக்கிச்சட்டை என்ற படத்தையும் தயாரித்தார். இதனிடையே, முதலுக்கு மோசம் இல்லை எனும் அளவுக்கு காக்கி சட்டை படம் ஓரளவு வெற்றிப் பெற்ற நிலையில், காக்கி சட்டை படத்தின் போது தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனிடம் நிறைய பிரச்சனை எழுந்ததாக அப்போதே நிறைய பத்திரிகைகளில் செய்திகள் கிசுகிசுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் மேடையில் கதறி அழுக, தனுஷ் தான் எல்லாத்துக்கும் காரணம் என அனைவரும் முடிவே செய்து விட்டார்கள். ஆனால் அந்தப் பிரச்சினைக்கு காரணம் என்ன என்பதை தற்போது சிவகார்த்திகேயன் வரை மூடி மறைத்து வைத்துள்ளார்.
இது ஒரு புறமிருக்க தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் அயலான். இப்படத்தின் அறிவிப்பு கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்தது.
இன்று நேற்று நாளை படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை இயக்க தயாரானார் ரவிக்குமார்.
இதனிடையே, 2016ஆம் ஆண்டு துவங்கிய அயலான் படம் பல பிரச்சனைகளை கடந்து படப்பிடிப்பை நிறைவு செய்து உள்ளது. பின் CG வேலைகள் காரணமாக ரிலீஸ் தாமதமாகி கொண்டே இருந்த நிலையில், தற்போது அயலான் படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஆம், வருகிற தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏறக்குறைய இது உறுதியான தகவல் என்று தான் நம்பப்படுகிறது.
இந்நிலையில், அயலான் வெளியாகவுள்ள அதே நாளில் தனுஷின் கேப்டன் மில்லர் படமும் வெளியாக உள்ளது. அதுமட்டுமின்றி கார்த்தியின் ஜப்பான் திரைப்படமும் அதே நாளில் தான் வெளியாகவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இதனால் கண்டிப்பாக இந்த மூன்று முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இடையே கடும் மோதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய தனுஷ் உடன் நேருக்கு நேர் சிவகார்த்திகேயன் மோத முடிவெடுத்துள்ள செய்தி கோலிவுட் வட்டாரங்களில் காட்டு தீ போல் பரவ ஆரம்பித்துவிட்ட நிலையில், மேலும் பல வருட பகைக்கு பழிதீர்க்க போகிறாரா எனவும் கேள்விகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.