ஆட்டத்தை ஆரம்பித்த குட்டி தளபதி SK.. சிவகார்த்திகேயனின் ரசிகர் மீட் பற்றி நெட்டிசன்களின் கமெண்ட்..!

Author: Vignesh
14 March 2024, 11:00 am

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.

sivakarthikeyan-updatenews360

பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார். கடைசியாக சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

sivakarthikeyan-updatenews360

இந்நிலையில், சிவகார்த்திகேயன் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை வரவைத்து சென்னை போரூர் பகுதியில் இருக்கும் பெரிய திருமண மண்டபத்தில் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார். சிவகார்த்திகேயன் ரசிகர்களை வரவழைத்து பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தியது பற்றி நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். அடுத்த தளபதியாக முயற்சிக்கிறார் சிவகார்த்திகேயன் என அதிகம் பேர் கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…