தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.
மேலும் படிக்க: இத்துணூண்டு பாட்டில் இத்தனை லட்சமா..தங்க பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் நீடா அம்பானி..!
பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார். கடைசியாக சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மேலும் படிக்க: நயன்தாராவுக்கு கெட்டவுட்.. மூக்குத்தி அம்மன் 2-ம் பாகத்தில் அம்மனாக நடிக்கும் பிரபல நடிகை..!
இந்நிலையில், மேலும் கமலஹாசன் தயாரிப்பில் அமரன் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்தநிலையில், தன் குடும்பத்துடன் நேரத்தையும் செலவிட்டு வருகிறார். அதே சமயத்தில், சிவகார்த்திகேயன் குறித்து பல செய்திகள் வதந்திகளாக இணையதளத்தில் பரவி வருகிறது. இதனை தொடர்ந்து, அதற்கு எதுமே பதில் அளிக்காமல் அதை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே இரு குழந்தைகள் இருந்த நிலையில், அவரது மனைவி ஆரத்தி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
கடந்த மாதம் சிவகார்த்திகேயன் தன் மனைவியை நாடாளுமன்ற தேர்தலுக்கு ஓட்டு போட அழைத்து வந்து இருந்தார் அப்போது ஆரத்தியை பார்த்த ரசிகர்கள் கர்பமாக இருப்பதாக கூறி வந்தனர். தற்போது, சமீபத்தில் கணவருடன் அவர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் ஆரத்தி கலந்து கொண்டுள்ளார். அவரை பார்க்க கர்ப்பமாக இருக்கிறார் என்று ரசிகர்கள் மீண்டும் கூறி வருகிறார்கள். மேலும், ஒரு வேளை சிவகார்த்திகேயன் குழந்தை பிறந்த பின்பு கூறிக் கொள்ளலாம் என்று ரகசியமாக வைத்திருக்கிறாரோ என்ற கேள்வியும் எழுப்பி வருகிறார்கள்.
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
This website uses cookies.