AK-க்கு வாழ்த்து சொன்ன SK…வைரலாகும் சிவகார்த்திகேயனின் ட்விட்டர் பதிவு..!

Author: Selvan
11 January 2025, 2:05 pm

ரோல் மாடலாக இருக்கும் அஜித் சார்..SK-வின் ட்விட்டர் பதிவு

நடிகர் அஜித்குமார் சினிமாவில் நடிப்பதை தாண்டி தற்போது கார் ரேஸில் கலக்கி வருகிறார்.இதற்காக இவர் தனது டீமுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு நேற்று நடந்த சுற்றில் 7-வது இடத்தை பிடித்து,அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Ajith Kumar Dubai Race

இதனால் உலகம் முழுவதும் இருக்க கூடிய ரசிகர்கள் அஜித்தின் இந்த கார் ரேஸ் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.இந்த சூழலில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் அஜித் கார் ரேஸ்க்கு வாழ்த்து தெரிவித்து,தன்னுடைய X-தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்க: மீண்டும் சமந்தாவை துரத்தும் கொடிய நோய்…இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் ஷாக்..!

அதில் அன்பிற்குரிய அஜித்குமார் சார்,துபாயில் நீங்கள் கலந்து கொள்ளும் 24- மணி நேர கார் ரேஸுக்கு வாழ்த்துக்கள் என கூறி,உங்களுடைய நம்பிக்கையும் அதற்கான கடின உழைப்பும் என்னைப் போன்ற பலருக்கு ஊக்கமாக உள்ளது,மேலும் நீங்கள் இந்த பந்தயத்தில் மாபெரும் வெற்றி பெற என்னுடைய மனமார வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

இந்த கார் ரேஸ் அஜித்தின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றியாக ரசிகர்கள் மற்றும் பல சினிமா பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.மேலும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகலாம் என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

  • Vijay and Nizhalgal Ravi reunion விஜய்க்கு அப்பாவாக நடிக்கும் பிரபல ஹீரோ…25 ஆண்டுகளுக்கு பிறகு ‘ஜனநாயகன்’ படத்தில் என்ட்ரி.!