மெரினா பட வாய்ப்பை பாண்டியராஜ் கொடுத்திருந்தாலும் தனுஷுடன் நடித்த 3 படத்தில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் அனைவரையும் ரசிக்கவைத்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தனுஷ் சிவகார்த்திகேயனை ஹீரோவாக வேண்டும் என விருப்பப்பட்டு சொந்த தயாரிப்பில் எதிர்நீச்சல் படத்தை வழங்கினார்.
வெற்றிப்படமாக அமைந்ததால் உடனடியாக காக்கிச்சட்டை என்ற படத்தையும் தயாரித்தார். இதனிடையே, முதலுக்கு மோசம் இல்லை எனும் அளவுக்கு காக்கி சட்டை படம் ஓரளவு வெற்றிப் பெற்றது.
இது ஒரு புறமிருக்க தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் அயலான். இப்படத்தின் அறிவிப்பு கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்தது.
இன்று நேற்று நாளை படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை இயக்க தயாரானார் ரவிக்குமார்.
இதனிடையே, 2016ஆம் ஆண்டு துவங்கிய அயலான் படம் பல பிரச்சனைகளை கடந்து படப்பிடிப்பை நிறைவு செய்து உள்ளது. பின் CG வேலைகள் காரணமாக ரிலீஸ் தாமதமாகி கொண்டே இருந்த நிலையில், தற்போது அயலான் படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆம், வருகிற தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அயலான் வெளியாகவுள்ள அதே நாளில் தனுஷின் கேப்டன் மில்லர் படமும் வெளியாக உள்ளது. அதுமட்டுமின்றி கார்த்தியின் ஜப்பான் திரைப்படமும் அதே நாளில் தான் வெளியாகவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இதனால் கண்டிப்பாக இந்த மூன்று முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இடையே கடும் மோதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, சிவகார்த்திகேயன் உடற்பயிற்சி செய்யும் அதே ஜிம்மில் பிரபல நடிகை ஆஷ்னாவும் உடற்பயிற்சி செய்து வருவதாகவும், சமீபத்தில் இவர்கள் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி பல்வேறு வகையில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.