கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் சூரி நடிப்பில் வெளிவந்த கொட்டுக்காளி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் “பலர் எனக்கு வாழ்க்கை கொடுத்ததாக சொல்லி பழகி விட்டனர். ஆனால், நான் அது போல் இல்லை. என்னால் தான் சூரி வளர்ந்தார் என்று நான் சொல்லவே மாட்டேன். மற்றவர்கள் போல் நான் பேச மாட்டேன்” என பேசி இருந்தார்.
இந்த விஷயம் பெரும் சர்ச்சையாக வெடிக்க துவங்கியது. சிவகார்த்திகேயன் தனுஷை தான் இப்படி மறைமுகமாக சொல்கிறார் என பலரும் விமர்சித்து தள்ளினார்கள். வளர்த்து விட்டவரை இதுபோன்று நன்றி மறந்து விட்டு சிவகார்த்திகேயன் பேசுவது மிகப்பெரிய தவறு என கடுமையாக அவரை சாடினார்கள். ஏனென்றால் தனுஷ் தான் அவரை 3 திரைப்படத்தில் நடிகராக அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய வலைப்பேச்சு பிஸ்மி… தூக்கி விட்டவர்களை தூக்கி போட்டு மிதித்தவர் தான் சிவகார்த்திகேயன். அதில் பட்டியல் நீண்டு கொண்டே போகும் என குறிப்பிட்ட அவர், சிவகார்த்திகேயனுக்கு தனுஷ் மீது ஒரு தனிப்பட்ட வன்மமே ஏற்பட்டு இருக்கிறது என கூறினார்.
தனுஷின் ஆபீசுக்கு அருகிலேயே ஒரு ஆபீசை போட்டு அப்படியே ஜம்முன்னு வந்து ஏய் நான் வளந்துட்டேன் பார்த்தியா? என்ற மாதிரி ஒரு நக்கலான தொனியில் சுற்றி வந்தார் சிவகார்த்திகேயன். இப்படித்தான் சிவகார்த்திகேயன் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவருக்காக உயிரையே கொடுத்து அவரை வளர்ச்சியின் உச்சத்தில் தூக்கி உட்கார வைத்த நபர்களை நகர்த்தி நகர்த்தி தள்ளி விட்டு விட்டார்.
இன்னும் சொல்லப்போனால் அவர்களின் தலை குடுமியை பிடித்து அமுக்கி தான் சிவகார்த்திகேயன் உயரத்திற்கு வந்தார். அப்படித்தான் சிவகார்த்திகேயன் வைத்து மெரினா திரைப்படத்தை எடுத்த பாண்டிராஜனுக்கு இரண்டு படத்தை நடித்துக் கொடுப்பதாக அக்ரிமெண்ட் போட்டார்.
அப்படி ஒரு அக்ரிமெண்ட் போட்டு தான் அந்த திரைப்படத்திலேயே அவர் நடித்தார். ஆனால் அந்தத் திரைப்படத்தில் நடித்த பிறகு தயாரிப்பாளர் பாண்டியராஜுக்கு இவர் கால்ஷீட் கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் கேட்டு கேட்டு கடும் கோபத்திற்கு உள்ளான பாண்டிராஜ் அந்த அக்ரீமெண்ட்டையே கிழிச்சு போட்டு விட்டார் என பிஸ்மி சிவகார்த்திகேயனின் மோசமான முகத்தை கிழித்தெறிந்து காட்டினார்.
இதைக் கேட்ட பின்பு ரசிகர்கள் எல்லோரும் அதிர்ச்சியாகி சிவகார்த்திகேயன் இவ்வளவு கேவலமானவரா? என அவரை விமர்சித்து தள்ளி வருகிறார்கள். மேலும் சில சிவகார்த்திகேயனின் வளர்ச்சி என்பது இன்றுவரை புரியாத புதிராக இருக்கிறது.
அவரைவிட நல்ல திறமை மிக்க கதாநாயகர்கள் இவரின் அளவுக்கு மேல் வளராமல் போனது ஏன்? என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. இந்த உலகம் மற்றும் நம் தமிழ் ரசிகர்கள் நேர்மைக்கும் திறமைக்கும் ஆதரவாக இல்லை என்பது தான் அப்பட்டமான உண்மை அந்த வகையில் விஜய் சேதுபதி எனும் மகத்தான கலைஞன் தமிழ் ரசிகர்களால் பாராட்டக் கூடியவர் என ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.