“எலோன் மஸ்க்”-யிடம் டீல் பேசிய சிவகார்த்திகேயன்…! X தளத்திற்கு ஆபத்தா..?

Author: Selvan
27 November 2024, 4:37 pm

சிவகார்த்திகேயன் அறிவுரை

தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது “எஸ்கே 23” படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தை தொடர்ந்து, “எஸ்கே 24” மற்றும் “எஸ்கே 25” படங்களின் படப்பிடிப்பும் ஆரம்பமாக இருக்கின்றன. இவை அனைத்தும் சிவகார்த்திகேயனின் ரசிகர்களிடம் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்கள் ஆகும்.

Sivakarthikeyan at Indian Film Festival

இந்திய திரைப்பட விழாவில் சிவகார்த்திகேயன்

கோவாவில் கடந்த 20ஆம் தேதி இந்திய திரைப்பட விழா துவங்கியது. இந்த விழாவில் தமிழில் “ஜிகர்தண்டா” மற்றும் “டபுள் எக்ஸ்” போன்ற படங்கள் தேர்வாகி பாராட்டுகள் பெற்றன.இவ்விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்று கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், சமூகவலைதளங்களை குறைவாக பயன்படுத்துங்கள் என்று கூறினார். குறிப்பாக, எக்ஸ் (Twitter) தளத்தை பயன்படுத்தாதீர்கள் என்று அவர் தாழ்மையுடன் அறிவுரை வழங்கினார். இது அவரது ரசிகர்களுக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்க: கோவையில் மங்களகரமாக தொடங்கிய சூர்யாவின் 45 பட பூஜை..படத்தின் தலைப்பு இது தானா..!

சிவகார்த்திகேயன் கூறியதாவது, “நான் கடந்த 2 ஆண்டுகளாக சமூக ஊடகங்களை குறைவாக பயன்படுத்துகிறேன். நீங்கள் இணையத்தை பயன்படுத்த வேண்டும் என்றால், அது நன்மையானதாக இருக்க வேண்டும். ஆனால் சமூக ஊடகங்கள் மற்றும் குறிப்பாக எக்ஸ் (Twitter) தளம் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்.”

இதனால் எலோன் மஸ்க் என்னுடைய X தளத்தை முடக்க வாய்ப்பு உள்ளது.அப்பிடி முடக்கினால் நான் தான் முதலில் கொண்டாடுவேன் என்று நகைச்சுவையாக பேசினார்.

அவர் மேலும் கூறுகையில், “எனது தந்தை மறைந்த பிறகு நான் மனஅழுத்தம் அடைந்தேன். அதனால் நான் மேடைகளில் பேசினேன். எனக்கு கிடைத்த பாராட்டுகள், கைதட்டல்கள் எனக்கு உற்சாகம் அளித்தன.”

சிவகார்த்திகேயனின் இந்த அறிவுரை,ரசிகர்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் தாக்கத்தைப் பற்றி பேசப்பட்டு வருகிறது.

  • Hansika Motwani Mumbai Police ஹன்சிகாவில் எனக்கு வந்த நோய்.. பரபரப்பு புகாரில் வழக்குப்பதிவு!
  • Views: - 150

    0

    0