விஜய்யை காலி செய்த சிவகார்த்திகேயன்… கோட் படத்தை முந்திய அமரன்!

Author: Udayachandran RadhaKrishnan
6 November 2024, 11:13 am

நடிகர் சிவகார்த்திகயேன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் அமரன். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை தழுவல் படம் என்றாலும், அதற்கேற்றால் போல எஸ்கே மற்றும் சாய் பல்லவி நடிப்பில் மிரட்யிருந்தனர்.

படம் வெளியான உடனே பாசிட்டிவ் ரிவியூஸ் வர ஆரம்பித்தது. ரங்கூன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்த படத்திற்கு ஜிவி இசையமைத்திருந்தார்.

படம், பாடல், நடிப்பு என எல்லாவற்றிலுமே அமரன் பாஸ் மார்க்கை தாண்டி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இதுவரை வந்த எஸ்கே படத்தை விட இந்த படம் உச்சக்கட்ட வெற்றியை பதிவு செய்துள்ளது.

கோட் படத்தில் விஜய் தனது துப்பாக்கியை எஸ்கேவிடம் கொடுத்ததும், எஸ்கே சுட்டு தள்ளிவிட்டார் என அவரது ரசிகர்கள் மார்தட்டுகின்றனர்.

இதையும் படியுங்க: மனைவிக்கு நெஞ்சுவலி… மருத்துவமனைக்கு அழைத்து வந்த கணவன் உயிரிழப்பு : இப்படியும் ஒரு சாவா?

ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் அமரன் படம் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை கோட் படம் அங்கு 18 கோடி மட்டுமே வசூல் செய்த நிலையில், அமரன் படம் இதுவரை 19 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், கோட் படத்தை அமரன் முந்தியதாகவும் ரசிகர்கள் அதகளப்படுத்தி வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!