வேட்டையனை அடித்து நொறுக்கிய அமரன்… 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2024, 11:28 am

கதை இருந்தா போதும் வசூல் மழை கொட்டும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது அமரன் திரைப்படம்.

மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாறை மையமாக எடுத்து வெளியான படம்தான் அமரன். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இதையும் படியுங்க: ரஜினி கொடுத்த டோஸ்.. மனம் மாறிய தனுஷ் : தீபாவளியன்று போயஸ் கார்டனில் நடந்தது என்ன?!!

ராஜ்குமார் பெரியசாமி இயக்க, கமல்ஹாசன் தயாரிக்க தீபாவளியன்று வெளியான திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு பக்கம் சிவகார்த்திகேயன் நடிப்பு பட்டையை கிளப்ப, மறுபக்கம் 500 ரூபாய்க்கு நடிக்க சொன்னால், 5 ஆயிரம் ரூபாய்க்கு சாய் பல்லவி நடித்துள்ளார். இருவரின் கெமிஸ்ட்ரி வேற லெவல் என ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.

படம் வெளியாகி 4 நாட்கள் ஆன நிலையில், இதுவரை உலகம் முழுவதும் ₹138 கோடி வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் சுலபமாக 200 கோடி வரை படம் வசூலிக்கும் என்பதில் எந்த மாற்றமுமில்லை. விஜய் இடத்தை புடிச்சுட்டாரு சிவா என ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

  • Director Mysskin controversial speech நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?…மிஸ்கினை காரி துப்பிய பிரபல நடிகர்…!