போட்றா வெடிய… வசூலில் பிரம்மாண்ட படத்தை முந்திய அமரன்…!!

Author: Udayachandran RadhaKrishnan
1 November 2024, 11:56 am

டிவியில் பிரபலமாகி சினிமாவில் கால் பதித்த சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக வலம் வருகிறார். நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலக உள்ளதால் அவர் இடத்தை எஸ்கே நிரப்புவார் என நம்பப்படுகிறது.

அதுக்கு ஏற்றார் போல கோட் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த சிவகார்த்திகேயனிடம் விஜய் துப்பாக்கியை கொடுத்த காட்சி கோலிவுட் ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.

இதையும் படியுங்க: சினிமா ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் சூர்யா மகன்…அவரை விட வளர்ந்துட்டாரே!

தற்போது தீபாவளியை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம், மேஜர் முகுந்த் குறித்த வாழ்க்கை படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எகிறியது

நேற்று வெளியான அமரன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முக்கியமாக எஸ்கே மேஜர் முகுந்தாக வாழ்ந்து இருக்கிறார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் முதல் நாள் வசூலில் அமரன் படம் கெத்து காட்டியுள்ளது. கோட் படம் முதல் நாள் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ரூ.38 கோடி வசூல் செய்துள்ளது.

தொடர்ந்து வேட்டையன் ரூ.20.50 கோடி வசூல் செய்தது. இதையடுத்து இந்தியன் 2 படம் முதல் நாளில் ரூ.13.50 கோடி வசூல் செய்திருந்த நிலையில் அமரன் படம் அதையை விட ரூ.15 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

  • Director Mysskin controversial speech நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?…மிஸ்கினை காரி துப்பிய பிரபல நடிகர்…!