சிவகார்த்திகேயனின் நடிப்பை பார்த்தால் பயமா இருக்கு… நடுங்கிய நட்சத்திர வாரிசு நடிகர்!

Author: Rajesh
8 February 2024, 10:31 pm

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.

பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார். கடைசியாக சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் பிரபல வாரிசு நடிகரான துகள் சல்மான் பேட்டி ஒன்றில் நடிகர் எந்த ஹீரோவின் நடிப்பை பார்த்தால் பயமாக இருக்கு? என்ற கேள்விக்கு சிவகார்திகேயனின்நடிப்பை பார்த்து நான் பயந்திருக்கிறேன் என வெளிப்படையாக கூறியுள்ளார். அதே போல் சிவகார்த்திகேயனும் துல்கர் சல்மானின் பந்தா இல்லாத குணம் எனக்கு மட்டுமின்றி என்னை போன்ற நடிகர்களுக்கு பாடம் என கூறியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!