ஜோதிகாவால் மன உளைச்சலுக்கு ஆளான சிவகுமார் – குடும்பத்தில் வெடித்த புதிய பிரச்சனை!

Author: Shree
6 April 2023, 8:36 am

புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார் .

முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். சிவகுமாருக்கு தன் மகன் ஒரு நடிகையை திருமணம் செய்வதில் விருப்பமே இல்லையாம். தன் ஜாதியில் பெண் எடுத்து திருமணம் செய்யவேண்டும் என எண்ணியதாகவும் அது நடக்காததால் மிகவும் வருத்தப்பட்டதாக சிவகுமாரே பேட்டி ஒன்றில் கூட கூறியிருந்தார்.

சூர்யாவுக்கு தான் அப்படி திருமணம் செய்யல கார்த்திக்காவது தன் ஜாதி பெண்ணை தன் திருமணம் செய்யவேண்டும் என ஆசைப்பட்டு ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனி என்ற பெண்ணை பார்த்து திருணம் செய்துவைத்தார்கள். இதனிடையே திருமணம் ஆன உடனே ஜோதிகா திரைப்படங்களில் நடிக்க கூடாது என வாக்கு வாங்கினாராம் சிவகுமார்.

ஆனால் பல வருடங்கள் கழித்து மீண்டும் சூர்யாவின் ஆதரவுடன் 2015 -ம் ஆண்டு 36 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார், இது சிவகுமாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். அதனால் திரைப்படங்களில் நடிக்க கூடாது என கோப்பட்டுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் அவரை சமாளிக்க முடியாததால் சூர்யா குடும்பத்துடன் கிளம்பி மும்பைக்கு சென்றுவிட்டார்.

இதனால் சிவகுமார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டாராம். மாமனார் சிவகுமாருக்கு ஜோதிகாவை சுத்தமாக பிடிக்கவில்லையாம். கார்த்தி மனைவி ரஞ்சனி தான் மாமனார் பேச்சை கேட்கிறாராம். இதுவே நம்ம ஜாதியில் பெண் எடுத்திருந்தால் இப்படி நடந்துக்கொள்ளவாரா? என புலம்பி வருகிறாராம் சிவகுமார்.

  • Makapa Anand skips wedding due to resentment with Priyanka பிரியங்காவுடன் மனக்கசப்பு? அமீர் – பாவனி திருமணத்தில் பிரியங்கா வந்ததால் புறக்கணித்த மாகாபா?!