நெஞ்சை நொறுக்கிய நிலச்சரிவு.. பெரும் தொகையை நிவாரண நிதியாக வழங்கிய நடிகர் சிவகுமார் குடும்பம்..!
Author: Vignesh1 August 2024, 4:13 pm
கேரள மாநிலத்தில் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிலும், முண்டக்கை பகுதி மிகப்பெரிய அழிவை சந்தித்திருக்கிறது.
அங்கிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால், அந்த இடத்தில் வீடுகள் இருந்த தடமே இல்லாமல் தற்போது காட்சியளிக்கிறது. அனைத்து இடங்களிலும் மண், மரங்கள் மற்றும் பாறைகளாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
கேரள நிலச்சரிவில் சிக்கி 251 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் பாதிக்க கூடிய மக்கள் பலர் உலகின்றி தண்ணீர் இன்றி கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன.
இந்நிலையில், பலரும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். நேற்று நடிகர் விக்ரம் 20 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியிருந்ததாகவும், இதனை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா 10 லட்சம் நிதி உதவி வழங்கியதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், நடிகர் சூர்யா, நடிகர் கார்த்திக் மற்றும் ஜோதிகா ஆகிய மூவரும் கேரள நிலச்சரிவு நிவாரண பணிக்காக ரூபாய் 50 லட்சத்தை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.