என் மானமே போயிரும்.. தயவு செஞ்சு காப்பாத்து… சூர்யாவிடம் கெஞ்சிய சிவக்குமார்!

Author: Udayachandran RadhaKrishnan
28 October 2024, 2:41 pm

அக் 27 நேற்று விஜய்யின் தவெக மாநாடு ஓரு பக்கம் நடக்க, இன்னொரு பக்கம் நடிகர் சூர்யாவின் கங்குவா பட ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது.

இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில், பங்கேற்ற சூர்யாவின் தந்தை நடிகர் சிவக்குமார், ஒரு சில வார்த்தைகளை பேசினார். சூர்யாவை பற்றி பேசும் போது, சூர்யாவுக்கு லயோலா காலேஜ்ல பிகாம் படிக்க வைக்க அப்ளிகேஷன் போட்டான்.. ஆனா அவனுக்கு சீட் கிடைக்கல.

உடனே நான் போசய் காலேஜ் பிரின்சிப்பிள் கிட்ட பேசுன, அப்போ அவரு சொன்னாரு, நடிகர் சிவாஜி பையன் பிகாம் முடிக்கல, பாலாஜி பையன் பிகாம் கம்பிளிட் பண்ணல, அது மாதிரி உங்க பையனும் பிகாம் முடிக்க மாட்டாருனு சொன்னாரு.

இதையும் படியுங்க: யார் இந்த பெண்? என்ன குரல் இது எலி குஞ்சு மாதிரி…. TVK மாநாட்டின் சொதப்பல்!

உடனே அவருக்கிட்ட அப்படியெல்லாம் நடக்காது அப்ளிகேஷன் குடுங்கனு கேட்டேன். சீட்டு வாங்கிட்டேன், ஆனா பிகாம் கடைசி வருஷம் 4 அரியர்ஸ் வெச்சிட்டுட்டான்.

சூர்யா கிட்ட, என் மானம் போயிரும், என்னை காப்பாத்துனு சொன்னேன். 6 மாசத்துல அரியர்ஸ் படிச்சு முடிச்சுட்டான் என சிவக்குமார் பேசினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?