சுட்டு போட்டாலும் சூர்யாவுக்கு நடிப்பு வராது.. பிரபல இயக்குனரிடம் கூறிய சிவகுமார்..!
Author: Vignesh11 February 2023, 11:30 am
சூர்யா தற்போது சிறுத்தை சிவா உடன் கூட்டணி சேர்ந்து ஒரு வரலாற்று கதையில் நடித்து வருகிறார். அந்த படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்து இருக்கிறது. ஷூட்டிங் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சூர்யா 42 படம் வரலாற்று கதை என்பதால் மிகப்பெரிய பட்ஜெட் ஒதுக்கி படத்தை தயாரித்து வருகிறார்கள்.மேலும் லோகேஷ் கனகராஜின் அடுத்த படமான தளபதி67 படத்தில் சூர்யா ரோலக்ஸ் ஆக நிச்சயம் வருவார் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
இதனிடையே, நடிகர் சூர்யா தமிழ் சினிமாவிற்கு நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானார்.

நேருக்கு நேர் படத்தில் சூர்யா நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் கமிட்டானவர் அஜித் தான். சில நாட்கள் நேருக்கு நேர் படத்தில் நடித்த அவர் கதையில் தன்னுடைய கதாபாத்திரம் வலுவாக இல்லாத காரணத்தினால் படத்திலிருந்து வெளியேறிவிட்டாராம்.

அஜித்துக்கு பதிலாக யாரை நேருக்கு நேர் படத்தில் நடிக்கவைக்கலாம் என இயக்குனர் வசந்த நினைத்து கொண்டிருந்தபோது, இணை இயக்குனர் ஒருவர் நடிகர் சிவகுமாரின் மகன் சூர்யாவை பற்றி தெரிவித்துள்ளார்.
இதன்பின் சிவகுமார் வீட்டிற்கு சென்ற இயக்குனர் வசந்த, சூர்யாவை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க சிவகுமாரிடம் கேட்டதற்கு, அதெல்லாம் வேண்டாம், சூர்யாவிற்கு நடிக்கவே தெரியாது என்று சிவகுமார் கூறி மறுத்துள்ளாராம்.
அதன்பின் ஒருவழியாக சிவகுமாரை சம்மதிக்க வைத்த இயக்குனர் வசந்த சூர்யாவை தன்னுடைய நேருக்கு நேர் படத்தில் நடிக்க வைத்துள்ளாராம்.