என் மானமே போச்சு.. தனிக்குடித்தனம் போன ஜோதிகாவால் சூர்யாவை திட்டிய சிவக்குமார்!

Author: Udayachandran RadhaKrishnan
20 March 2025, 7:20 pm

நடிகர் சூர்யா உடன் நடித்த நடிகை ஜோதிகாவை காதலித்து கரம்பிடித்தார். சூர்யா வீட்டில் எதிர்ப்பு என்ற பேச்சு எழுந்தாலும், இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரு குழந்தைகள் உள்ளனர்.

சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த ஜோதிகா, 36 வயதினிலே படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து ஜாக்பாட், மகளிர் மட்டும், உடன்பிறப்பு என அடுத்தடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவமான கேரக்டரில் நடித்தார்.

தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன், நல்ல கதைஇருந்தால் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க தயார் எனவும் கூறியிருந்தார். ஆனால் என்ன ஆனதோ, சூர்யாவை மற்றும் குழந்தைகளை அழைத்து கொண்டு மும்பையில் செட்டிலானார்.

பாலிவுட்டில் ஜோதிகா கவனம் செலுத்தி வரும் நிலையில், சூர்யாவையும் பாலிவுட் படத்தின் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் ஜோதிகா நடித்த வெப் சீரியஸ் ஒன்று வெளியானது. Dabba Cartel வெப் சீரியஸ் டப்பாவில் பெண்கள் போதை பொருள் கடத்துவதை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஜோதிகா நடிப்பு சுமார்தான் என் விமர்சனமும் எழுந்தது. அதை விட ஜோதிக இந்த படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளும் இருந்தன. இதுதான் தற்போது குடும்பத்தில் பூகம்பாக வெடித்துள்ளது.

ரசிகர்களே இதை ரசிகக்காத போது, சிவக்குமார் மட்டும் எப்படி ரசிப்பார்? என்ன உன்னோட மருமகள் இப்படி நடிச்சிருக்கா என சிவக்குமாருக்கு போன் போட்டு பேசியுள்ளனர். இது குறித்து பிரபல பத்திரிகையாளர் சபிதா கூறியதாவது, ஜோதிகா நடித்த கேரக்டரில் தப்பில்லை. அவர் அப்படித்தான் அதில் நடிக்க வேண்டும், ஒரு போதை பொருள் கடத்தும் பெண் என்ன செய்வாரோ அதைத்தான் செய்துள்ளார்.

ஆனால் இந்த காட்சிகளை பார்த்து சிவக்குமார், சூர்யாவுக்கு போன் செய்து தனியாக குடித்தனம் போனால் இப்படித்தான் என் மானத்தை வாங்குவீங்களா? பணத்துக்காக இப்படிய எல்லாம் நடிக்கணுமா? என திட்டியதாக சிலர் சொல்கிறார்கள்.

ஆனால், சிவக்குமார் அப்படி திட்டியிருப்பாரா என்பது சந்தேகமக்கதான் உள்ளது. அப்படி அவரு திட்டினாலும், அது அவருடைய பாரம்பரியம். அவரும் சரி, மகன்களும் கண்ணியமான படங்களில் தான் நடித்துள்ளனர்.

Sivakumar Scold Suriya and Jyothika

ஜோதிகாவும் நல்ல மருமகளாகத்தான் நடந்திருக்கிறார். இந்த வெப் சீரியஸால் சின்ன சங்கடம் ஏற்பட்டிருக்கலாம். இனி ஜோதிகா நல்ல கதையை தேர்வு செய்து கவனமாக நடிப்பார் என்று நம்பலாம் என சபிதா கூறியுள்ளார்.

  • Asal Kolaar கஞ்சா வச்சிருக்கியா? நடுரோட்டில் கேட்ட அசல் கோலார்.. நடந்தது என்ன?
  • Leave a Reply