ஏய் பன்னாடை… என்ன பராக் பார்த்துனு இருக்குற? Shot’ல் சைட் அடித்த நடிகையை திட்டித்தீர்த்த சிவக்குமார்!

Author: Shree
27 June 2023, 8:01 am

மிகச்சிறந்த ஓவியரும், மேடை பேச்சாளரும், ஒழுக்கமான நடிகருமான சிவகுமார் தமிழ் சினிமாவின் 70, 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகர் ஆவார். தமிழ் சினிமாவில் சிவகுமார் போன்று ஒரு நடிகரை பார்ப்பது அரிது. ஏனென்றால் இவர் எந்த வித கிசுகிசுக்களில் சிக்காமல் இருந்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் நடிப்பதற்கு சிவக்குமார் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தார்களாம். சினிமா பக்கம் போனா தன் மகன் பழக்கவழக்கங்கள் மாறிவிடுமோ என அஞ்சியே அவரது வீட்டார் முதலில் தயங்கி இருக்கிறார்கள். பின்னர் உறவினர் ஒருவரின் உதவியோடு சென்னைக்கு வந்திருக்கிறார் சிவகுமார்.

புகழ்பெற்ற நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரனுடன் 1965ல் வெளிவந்த காக்கும் கரங்கள் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் சிவகுமார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்று வளர்ந்தார். பலவேறு கௌரவ விருதுகளும் இருக்கு கிடைத்துள்ளது. திரைப்படங்கள் மட்டும் இன்றி தொலைக்காட்சிகளிலும் தலைகாட்டியிருக்கிறார். பிற நடிகர்களிடம் பார்க்க முடியாத ஒன்று சிவகுமாரிடம் இருக்கிறது. “ஒழுக்கம்” ஆம், அது தான் அவரை இன்றளவும் சிறந்த நடிகராகவும் சிறந்த குடும்பஸ்தராகவும் பார்க்க முடிகிறது.

சமீபத்தில் கூட இவரைப் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை அரசியல் விமர்சகர் காந்தராஜ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது நடிப்பு என்பது சிவக்குமாருக்கு ஆவரேஜ் தான் என்றும் கூறியிருக்கிறார். ஆனால் கடவுள் வேஷங்கள் இதுதான் சிவக்குமாருக்கு மிகவும் கச்சிதமாக பொருந்தியது என்றும் தெரிவித்து இருக்கிறார். ரவிச்சந்திரன் ஜெயசங்கர் இவர்களுக்கு முன்பே சிவக்குமார் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருந்தாலும், அவர்களைப் போல் அந்த ஒரு உயரத்தை அடையவில்லை என்றும் சொல்லப்போனால் சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன் இவர்களுக்கு அடுத்தபடியாக சிவகுமார், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் இவர்கள்தான் வரவேண்டியது எனவும், ஆனால் சிவக்குமார் அவர் அடைய வேண்டிய உயரத்தை அடையவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் அவருக்கு இன்று தனி நடிப்பு திறமையும் உண்டு அதனால் தான் என்னவோ 100 படங்களுக்கு மேல் அப்போதே நடித்து விட்டார் எனவும், மக்களின் ரசனைக்கு ஆளானவர் சிவகுமார் என்றும் தெரிவித்திருக்கிறார். இவர் அடிப்படையில், ஓவியராக இருந்திருக்கிறார் என்றும், தன் உடல் மீது அதிக அக்கறை கொண்ட மனிதர் என்றும் அதனால் தான் இன்றுவரை யோகா உடற்பயிற்சி இவைகளை கற்று உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறாராம். மேலும், அந்த காலகட்டத்தில் தாய்மார்கள் அனைவரும் பிள்ளைன்னு ஒன்று பிறந்த சிவக்குமார் மாதிரி பிறக்கணும் என்று சொல்வார்களாம். அந்த அளவுக்கு ஒழுக்கம் வாய்ந்தவராக சிவக்குமார் இருந்ததாக தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் நடிகை சுலோக்ஷனா சிவகுமாருடன் நடித்த அனுபவத்தை குறித்து பகிர்ந்துள்ளார். அதாவது, நான் பல படங்களில் சிவக்குமாருடன் நடித்திருக்கிறேன். அப்படித்தான் “அம்மா இருக்கா” என்ற படத்தில் சிவக்குமாருடன் நடித்த போது, ஒரு சம்பவம் நடந்தது. சிவக்குமார் டயல்லாக்குகள் பேசிக்கொண்டிருந்த போது அவரையே பராக் பார்த்துக்கொண்டு ஏனோதானோன்னு நடித்தேன். அதை பார்த்து கடுப்பான சிவகுமார் கோபத்தில் என்னை ஏய் பன்னாடை… என்ன பராக் பார்த்துனு இருக்குற? என்று கெட்டவார்த்தையால் கடுமையாக திட்டினார் என்று சுலோக்ஷனா கூறியுள்ளார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!