சூர்யா பெரிய நடிகராக வருவார்… அலட்சியமாக கேட்ட சிவகுமாருக்கு அதிர்ச்சி கொடுத்த ஜோசியர்!
Author: Rajesh13 February 2024, 7:28 pm
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா – ஜோதிகா. இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா 2015-ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
ஜோதிகா சூர்யாவை போன்றே தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர்கள் குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டனர். இந்நிலையில் தற்போது சூர்யா குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது, சூர்யா – கார்த்திக் இருவரும் நடிக்க வருவதற்கு முன்னர் சிவக்குமார் மகன்களை பற்றி ஜோசியம் கேட்டுள்ளார்.
அந்த அந்த ஜோசியர், உங்கள் மகன் சினிமாவில் நடிப்பார். அவர் மிகப்பெரிய நடிகராவார் என்றார். அதை கேட்டதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் உடனே அவரிடம், நல்லா பார்த்து சொல்லுங்க பெரிய பையனா? சின்ன பையனா? என கேட்டதும் அவர் பெரிய மகன் என அழுத்தமாக கூறினார். ஏனென்றால்
அவன் 4 வார்த்தை சேர்த்தே யார்ட்டையும் பேசமாட்டான் என்றேன்.
அதற்கு அந்த ஜோசியர் உங்களைவிட நல்ல நடிகராக உயர்ந்து நல்ல பெயர் வாங்குவார். உங்களைவிட அதிக சம்பளமும் வாங்குவார், அதிக விருதுகளையும் வாங்கி குவிப்பார் என லைனாக கூறிக்கொண்டே அதுமட்டுமில்லாமல் அவர் நிச்சயம் காதல் திருமணம் தான் செய்வார் என அடித்து கூறினார். நான் ஜோஷியத்தை நம்பவில்லை என்றாலும் அவர் சொன்ன அத்தனையும் அப்படியே நடந்தது தான் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது என சிவகுமார் கூறினார்.