வெளியான இக்கி பிக்கி; அதற்குள் தடையா? என்னதான் நடந்தது?…குழப்பத்தில் ரசிகர்கள்
Author: Sudha6 July 2024, 12:43 pm
பார்த்திபன் இயக்கியிருக்கும் படம் டீன்ஸ். குழந்தைகளை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார்.
நடிகர் பார்த்திபன் டீன்ஸ் படத்தின் கிராபிக்ஸ் மேற்பார்வையாளராக பணியாற்றிய சிவப்பிரசாத் என்பவர் மீது கோவை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார்.
அந்த புகாரில், டீன்ஸ் படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளை பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் 20 ஆம் தேதிக்குள் முடித்து தருவதாக என்னிடம் ஒப்பந்தம் போட்ட சிவப்பிரசாத் 68.54 லட்சம் ரூபாய் கேட்டார். தான் 42 லட்சம் முதல்கட்டமாக செலுத்தி விட்டேன், ஆனபோதிலும் இன்னும் தனது படத்தின் கிராபிக்ஸ் பணிகளை அவர் முடித்து தரவில்லை.மாறாக இன்னும் கூடுதலாக பணம் கேட்கிறார் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இதனை மறுத்துப் பேசிய சிவ பிரசாத் பணிகளை முழுமையாக முடித்துவிட்டோம்.அதன்பிறகே பணம் கேட்டோம். ஆனால் பணிகளை முடிக்கவில்லை என பொய் புகார் அளித்துள்ளார் பார்த்திபன். சட்டத்தை நம்புகிறோம் என தெரிவித்தார்..
படம் வரும் ஜூலை 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நாளில் தான் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படமும் திரையரங்குகளில் திரைக்கு வருகிறது.இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற இக்கி பிக்கி பாடல் நேற்று யூடியூப் ல் வெளியானது.
இந்த நிலையில் ‘டீன்ஸ்’ திரைப்படத்திற்கு தடை கோரி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கிராபிக்ஸ் பணியாற்றிய சிவ பிரசாத் தொடர்ந்த வழக்கில் நடிகர் பார்த்திபன் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.