சிவராஜ்குமார் பதில் இவரா..தமிழ் நடிகருக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ்..!

Author: Selvan
30 November 2024, 3:40 pm

20 கோடி சம்பளம் கேட்கும் தமிழ் நடிகர்

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவராஜ்குமார்.இவர் தமிழில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தில்,கேமியோ ரோலில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

Kannada actor Shivrajkumar health update

அடுத்ததாக தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் நடித்தார்.பின்பு விஜய் கடைசி படமான தளபதி 69 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.ஆனால் திடிரென்று உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் விஜய் படத்தில் இருந்து விலகினார்.

இதையும் படியுங்க: தடபுடலாக நடக்கும் நாக சைதன்யா திருமணம்..நாகர்ஜுனா கொடுக்கும் விலை உயர்ந்த பரிசு என்னனு தெரியுமா..!

தற்போது அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்றுவருகிறார்,இந்நிலையில் சத்யஜோதி தயாரிப்பில் இயக்குனர் ரவி அரசு இயக்கம் புது படத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்திருந்தார்.

இப்படம் சிவராஜ்குமாருக்கு 130 வது படமாக இருக்கும் என படக்குழு தெரிவித்திருந்தது.தற்போது அவர் சிகிச்சை மேற்கொண்டு வருவதால் அந்த படத்தில் நடிக்க நடிகர் விஷாலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Vishal replaces Shivrajkumar in Sathyajothi film

இப்படத்திற்கு விஷால் 20 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.நடிகர் விஷாலுக்கு கடந்த பல ஆண்டுகளாக சினிமாவில் சொல்லிக்கிடும் அளவிற்கு படங்கள் ஹிட் ஆகவில்லை.

இப்படத்தில் அவர் முழு ஈடுபாடுடன் படக்குழுவிடம் சேர்ந்து ஒழுங்காக நடித்தால் விஷாலின் சினிமா வாழ்க்கையில் இப்படம் ஒரு திருப்பு முனையாக அமையும் என எதிர்பாக்கப்படுகிறது

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 160

    0

    0