தனது காதலியை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்திய எஸ்.ஜே. சூர்யா.. – திருமணம் குறித்து ஓபன் டாக்..!

Author: Vignesh
7 June 2023, 5:30 pm

வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மிரவைப்பவர் எஸ்ஜே சூர்யா. திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டிருக்கிறார். அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.

s j surya-updatenews360

நியூ, அன்பே ஆருயிரே, வியாபாரி , நியூட்டனின் மூன்றாம் விதி , இறைவி , மெர்சல் , மாநாடு, டான், வாரிசு என பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக வில்லனாக அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைவரது மனதிலும் அழுத்தமாக நின்றுவிடும்.

s j surya-updatenews360


இந்நிலையில், 54 வயதாகும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், பல முறை எஸ்.ஜே. சூர்யா குறித்து காதல் கிசுகிசுக்கள் அவ்வப்போது, வெளிவந்து கொண்டு உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் திருமணம் குறித்து எஸ்.ஜே.சூர்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

s j surya-updatenews360

அதற்க்கு திருமணம் செய்துகொள்ள போவதில்லை என்பது போல் மழுப்பி பதில் ஒன்றை தெரிவித்து உள்ளார். சினிமாவை தான் காதலிப்பதாகவும், படங்கள் தான் முக்கியம் என்பது போல் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?