யோவ்… கொஞ்சம் REST விடுய்யா… நடிப்பு அரக்கன் SJ சூர்யாவின் அடுத்த சம்பவம் ரெடி!

Author:
29 July 2024, 9:04 am

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இளம் நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

இந்த திரைப்படம் கலகலப்பான காதல் செண்டிமெண்ட் மற்றும் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது. இத்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லன் ஆக நடிக்க கௌரி கிஷன் உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் லலித்குமார் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருக்பிறர்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல அரசியல் புள்ளியான சீமான் நடித்திருப்பது ஹைலைட். இத்திரைப்படம் வருகிற ஜூலை 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். சமீப நாட்களாக எஸ் ஜே சூர்யா தொடர்ச்சியாக அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கடைசியாக வெளிவந்த கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா நடித்திருந்தார். அதை அடுத்து தனுஷ் நடிப்பில் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள ராயன் திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா அதிரடி வில்லனாக நடித்து மிரட்டி எடுத்திருக்கிறார். அதைத்தொடர்ந்து தற்போது லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் திரைப்படத்திலும் எஸ் ஜே சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அதன் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி எல்லோரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதனை பார்த்து நெட்டிசன்ஸ் எல்லோரும் யோவ் என்னய்யா நீ எல்லா படத்துலயும் இருக்குற?கொஞ்சமாச்சும் ரெஸ்ட் விடுய்யா என கமெண்ட்ஸ் செய்து தள்ளியுள்ளனர். சமீப நாட்களாக எஸ். ஜே சூர்யாவின் மார்க்கெட் பீக்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • fear was more when doing ajith project அஜித் சார் படம்,பயம்தான் அதிகமா இருந்தது- ஆதிக் ரவிச்சந்திரன் ஓபன் டாக்…