காதல் தோல்வி… 55 வயதாகியும் திருமணம் செய்யாத SJ சூர்யாவின் சோகக்கதை!

Author: Rajesh
21 December 2023, 2:15 pm

வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மிரவைப்பவர் எஸ்ஜே சூர்யா. திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டிருக்கிறார். அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.

நியூ, அன்பே ஆருயிரே, வியாபாரி , நியூட்டனின் மூன்றாம் விதி , இறைவி , மெர்சல் , மாநாடு , டான் , வாரிசு என பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக வில்லனாக அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைவரது மனதிலும் அழுத்தமாக நின்றுவிடும். தமிழ், தெலுங்கு மொழி ரசிகர்களுக்கு பிரபலமானவராக பார்க்கப்படுகிறார். கடைசியாக மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

sj surya 1

எஸ்.ஜே சூர்யா சினிமாவில் வாய்ப்புகள் தேடி அலைந்துக்கொண்டிருந்த நேரத்தில் அஜித் செய்த உதவி குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில், தயாரிப்பாளர் ஒருவரிடம் வாலி படத்தின் கதையை சொல்லி நிராகரிக்கப்பட பாண்டிபஜாரில் 12B பஸ்ஸிற்கு பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்த எஸ்ஜே சூர்யாவை அவ்வழியாக காரில் சென்ற அஜித் பார்த்து என்ன இங்க நின்னுட்டு இருக்கீங்க வாங்க என அழைத்து சென்று ரெஸ்டாரண்டில் மத்திய உணவு சாப்பிடவைத்துள்ளார்.

sj surya

பின்னர் அவர் காலில் தேய்ந்துபோன செப்பலுக்கு ஊக்கு போட்டிருப்பதை பார்த்து மிகவும் வருந்திய அஜித் அவருக்கு ஒரு நல்ல செருப்பு வாங்கிக்கொடுத்து என்ன கதை சொல்லுங்க என கேட்டதும் அந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துப்போக தயாரிப்பாளர் எஸ்எஸ் சக்கரவர்த்தியிடம் அழைத்துச்சென்று படம் ஒப்பந்தம் செய்து அதில் அஜித்தே நடித்து மாபெரும் ஹிட் படமாக்கினார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் 55 வயது வரை திருமணம் செய்யாமல் இருப்பது ஏன் என்று கேட்டதற்கு, எனக்கு ஒரு காதல் தோல்வி இருந்தது. என்னுடைய காதல் “அன்பே ஆருயிரே” திரைப்படத்தைப் போன்றே தான் இருக்கும். இருவரும் உண்மையாக காதலித்து வந்தோம். ஒருமுறை என் காதலி இரவு விருந்து ஏற்பாடு செய்து என்னை அழைத்தார். அந்த சமயத்தில் ஒரு தயாரிப்பாளர் படத்தை பற்றி பேச என்னை அழைத்திருந்தார்.

நான் அங்கு சென்றுவிட்டேன். அந்த மீட்டிங் 12 மணி நேரம் வரை சென்றது. அதை முடித்துவிட்டு நான் அவசர அவசரமாக காதலியின் வீட்டிற்கு சென்றேன்.அப்போது அவர் ” இது ஒன்றும் சத்திரம் இல்லை” நினைத்த நேரத்திற்கு வருவதற்கு” என முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டு கதவை சாற்றிக்கொண்டார். அது எனக்கு மிகுந்த வேதனையை கொடுக்க அந்த காதல் முறிந்துவிட்டது. அதன் பின்னர் திருமணத்தை பற்றி யோசிக்க முடியவில்லை. அப்படியே காலங்கள் ஓடிவிட்டது என்றார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி